தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி

54வது தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், தமிழ்மொழி கற்றல் மற்றும் வளர்ச்சிக் குழு ஆதரவில் ஏற்பாடு செய்திருக்கும் மொழிபெயர்ப்புப் போட்டிகள் நாளை மாலை 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறஇருக்கிறது.

உமறுப்புலவர் தமிழ்மொழி  நிலையத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு இடையில் பெற்றோர்களை மகிழ்விக்கும் வகையில் தொடக்கநிலை மாணவர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் ஒன்றும் நடைபெறவிருக்கிறது.

பட்டிமன்றத்தின் தலைப்பு ‘இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்

படுத்திக் கொள்கிறார்களா?  ‘ஆம்’ என்ற அணியில் நிலா, ஹரிநேத்ரா மற்றும் அக்ஷயா ஆகியோரும், ‘இல்லை’ என்ற அணியில் ஸ்ம்ருதா, மகிஷா, மற்றும் யாழ் பாரதி ஆகியோரும் வாதிடுகிறார்கள்.

முனைவர் ராஜி சீனிவாசன் பட்டிமன்ற நடுவராக இருந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.

மொழிபெயர்ப்புப் போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறும் தொடக்க நிலை 1,2 முதல் பிரிவாகவும், 3,4 இரண்டாம் பிரிவாகவும், 5,6 மூன்றாம் பிரிவாகவும் இடம்பெறும்.

72 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டிமன்றம் முடிந்ததும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் பார்வையாளர்கள்  முன்னிலையில் நடைபெறும். வெற்றிபெறும் மாணவர்களுக்குப் புத்தகப் பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்படும்.

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அன்பரசு இராசேந்திரன் அவர்கள் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்

கிறார்.

Loading...
Load next