விநாயகர் சதுர்த்தியையொட்டி சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

1 mins read
637c5d62-c707-406d-8bab-4c0aa088f272
விநாயகப் பெருமானின் திருவுருவம். நன்றி: இந்து அறக்கட்டளை வாரியம். -

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தீவெங்கிலுமுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன:

 ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயிலில், 36ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று துவங்கி வரும் 4ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஸ்ரீ ருத்ர காளியம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெறும். இன்று காலை 8 மணிக்கும் மாலை 6 மணிக்கு யாகசாலை வழிபாடுகள் நடைபெறும்.

 ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 7.30 மணிக்கு சங்கல்பத்தைத் தொடர்ந்து வழிபாடுகளும் 10.30 மணிக்கு பால்குட அபிஷேகமும் நடைபெறும். இரவு 7.30 மணி முதல் வரிசை எடுத்தல், விநாயகர் புறப்பாடு நடைபெறும்.

 பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜைகளைத் தொடர்ந்து குளத்து விநாயகருக்குப் பக்தர்கள் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம்.