சுடச் சுடச் செய்திகள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இளநீர்

தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறையும்.

சோர்வை எதிர்த்துப் போராட இளநீர் உதவுவதுடன் ஆற்றலை அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இளநீரில் உள்ள ‘லாரிக்’ அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களின்  உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும் மலச்சிக்கல் பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவும். 

உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பதால் உடலில் நீர்சத்தை அதிகரிக்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் செய்யும். 

அதேபோல் உடற்பயிற்சிக்குப் பின்னர் இளநீர் குடிப்பதால் உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பைச் சமன் செய்யவும் முடியும்.

உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது உங்கள் உணவை முழுமையாக்குகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது.  

தூங்கச் செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கவும் மன அமைதியை ஏற்படுத்தவும்  உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. 

இளநீரில் எலக்ரோலைட்டுகள்,  கனிமச்சத்துகள் அதிகம் இருப்பதால் உடலில் நீர்ச்சத்தின் அளவைச் சீராகப் பராமரித்து, அதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

கார்போனேட்டட் பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக இளநீரை வாங்கிக் குடித்தால் புத்துணர்ச்சிையயும் உடனடி சக்தியையும் பெறலாம். 

மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும் கனிமச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால் நாள் முழுவதும் வேண்டிய ஆற்றலையும் இது வழங்கும்.

இளநீரில் கொலஸ்ட்ரால் இல்லாததால் இதனை தினமும் குடித்து வந்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon