சுடச் சுடச் செய்திகள்

கூகல் இல்லாத கைப்பேசியை நீங்கள் பயன்படுத்துவீர்களா?

ஐ-போன் அலையால் பலர் ஆப்பிள் கடைகளுக்குச் சுண்டியிழுக்கப்படும் இந்நேரத்தில் ஹுவாவேய்யும் தனது புதிய மேட் 30 திறன்பேசிகளை வெளியிட்டுள்ளது. 

ஹுவாவேய்யுடன் வர்த்தகம் செய்வதற்கு கூகல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் தடை விதித்திருந்தது. அதனால் ஹுவாவேய்யின் இந்தப் புதிய வெளியீடுகளில் கூகல் தேடுதளம், கூகல் வரைபடம், யூடியுப் ஆகியவற்றுக்கான செயலிகள் இருக்காது. ‘கூகல் பிளேஸ்டோர்’ செயலி பதிவிறக்கச் சேவையும் இந்தக் கைப்பேசிகளில் இடம்பெறாது.

 

கூகல் இல்லாதது ஹுவாவெய்க்கு மரண அடியை ஏற்படுத்தக்கூடிய பெரும் பின்னடைவாக இருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும், தனது கேமரா தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர அந்நிறுவனம் முயல்கிறது. பயனீட்டாளர்களே சொந்தமாகப் படத்தொகுப்புகளையும் காணொளிகளையும் தயாரிக்கும் போக்கின் அதிகரிப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது அந்நிறுவனம்.

ஒரு வினாடிக்கு  7680 படங்களை (frames) எடுக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ள  மேட் 30 திறன்பேசிகளை வெறு எந்தத் திறன்பேசியும் இதுவரை விஞ்சியதில்லை. 

ஹுவாவேய்யின் புதிய மேட் 30 திறன்பேசிகள் சிங்கப்பூர்க் கடைகளில் இவ்வாண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon