கம்பன் விழாவில் வழக்காடு மன்றம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கம்பன் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 13ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவுள்ளது. சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் பங்கேற்கிறார்.  

தமிழ்நாட்டின் இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருவாட்டி வாசுகி மனோகரன் ‘தருமம் அன்னான் தனை உற்றான்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு வழக்காடு மன்றம் இடம்பெறும். ‘குற்றவாளிக் கூண்டிலே காகுத்தனை நிறுத்தி வாலியை மறைந்து நின்று கொன்றது குற்றம், சீதையைத் தீக்குளிக்க வைத்தது குற்றம்’ எனக் குற்றஞ்சாட்டப்படும்.

முனைவர் க.இராஜகோபாலனும் முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணனும் குற்றஞ்சாட்ட, அவற்றை முனைவர் ராஜி சீனிவாசனும் முனைவர்  ந. செல்லக்கிருஷ்ணனும் மறுத்து வாதாடுவர். திருவாட்டி வாசுகி தீர்ப்பளிப்பார்.