கவிமாலை

கவிமாலையின் 233வது மாதாந்திரச் சந்திப்பு நாளை 20/10/2019  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு பூகிஸ் எம்ஆர்டியை அடுத்த 100, விக்டோரியா தெருவில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 5வது தளத்தின் ‘Imagination Room’ல் நடைபெறவுள்ளது. ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவியரின் ‘கனிமொழியின் கவிமொழிகள்’ எனும் நூலைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். வளர்தமிழ் இயக்கத் தலைவர்  சு.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். ‘மொட்டு விரியும் சத்தம்’ எனும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி திரு.K.நல்லதம்பி சிறப்புரையாற்றுவார். 

பிடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம் போன்ற நிகழ்வுகளுடன், ‘சொல்லே அதிகம் சுடும்’ எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்களும் உண்டு. தொடர்புக்கு: 8596 0076