இதயம் காக்க மருத்துவ சிறப்புரை

பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மருத்துவ சிறப்புரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.  நோயில்லாமல் எப்படி வாழ்வது, நோய் வரும் முன் எப்படி காத்துக்கொள்வது, நோய் வந்த பின் எப்படி கையாள்வது போன்ற கேள்விகளுக்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய நல மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் திரு வி. சொக்கலிங்கம் சிறப்புரையாற்றி பதிலளிப்பார்.  

அவருடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அசோக்கா பாலருஷ்ணனும் கலந்துகொண்டு பல அரிய மருத்துவ குறிப்புகளை வழங்குவார். இரு மருத்துவர்களின்  உரையின் முடிவில் கேள்வி பதில் அங்கம் இடம்பெறும்.  இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம்.  உரை முடிந்த பின் இரவு உணவு வழங்கப்படும். 

தொடர்புக்கு: 

ஜெகதீஷ் இளங்கோ - 90058127

தேதி : 2-11-2019

நேரம்: மாலை 6 மணி