இந்தியர்களுக்கு உறக்கமும் குறைவு; சுறுசுறுப்பும் குறைவு

சிலர்் படுத்தவுடன் தூக்கத்துக்குப் பேர் போன கும்பகர்ணனைப் போல் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் எவ்வளவுதான் புரண்டு புரண்டு படுத்தாலும் பல மணி நேரத்திற்கு தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.

இந்த தூக்கம் குறித்து ஃபிட்பிட் உடற்பயிற்சி சாதனத் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் விவரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தில் வெளிவந்துள்ளன.

ஆய்வின்படி, இந்தியர்கள் மிகக்குறைந்த அளவிலேயே துடிப்பு டன் செயல்படுகிறார்கள் என்றும் போதிய அளவில் தூக்கமின்றி இருப்பவர்கள் மத்தியில் இவர்கள் இரண்டாவது இடத்தில் இருப்ப தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தி யர்கள் சராசரியாக இரவு நேரத்தில் 7 மணி நேரம் 1 நிமிடம் தூங்குவதாகவும் இது சராசரி நேரத்தைக் காட்டிலும் 48 நிமிடங்கள் குறைவாகும்.

பெரிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதாக வும் தெரிகிறது.

தூக்கமின்மை பிரச்சினையில் இந்தியா இரண்டாம் இடமும் ஜப்பான் முதல் இடமும் பிடித்துள்ளன. ஜப்பானியர்கள் சராசரியாக 6 மணி 47 நிமிடங்கள் தூங்குவ தாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தினமும் இந்தியர்கள் சராசரியாக 6,533 அடிகள் மட்டுமே நடைபயிற்சியில் ஈடுபடுவதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரி விக்கின்றன.

மிகவும் சுறுசுறுப்பாக ஹாங்காங் நாட்டு மக்கள் இருப்பதாகவும் இவர்கள் சராசரியாக 10,133 அடிகள் தினமும் நடக்கின்றனர்.

நாம் அன்றாட வேலைகளை சிறப்பாக, சரியாக செய்யவேண்டும் என்றால் தூக்கம் முக்கியம்.

16 மணி நேரத்திற்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் மனித உடலுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

அதேபோன்று அதிக நேரம் தூங்கும் மக்கள் கொண்ட நாடு களில் பிரிட்டிஷ் முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 18 நாடுகளில் அண்மையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நினைவாற்றல், சுறுசுறுப்பு, உடல் வளர்சிதை மாற்றம் உள்ளிட்டவைக்கு தூக்கம் அவசியம். இளம் பருவத்தினர் தாமதமாக தூங்கச் செல்வதற்கு கைபேசி பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களில் செலவிடும் நபர்களுக்கு கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கு உறங்க தொலைபேசியை அணைத்து வையுங்கள், உங்களது அறையில் கைபேசிகள்,கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாமல் இருப்பது நல்லது.

உணவு பழக்கவழக்கங்களும் தூக்கம் வருவதற்கு அவசியம் என்றும் இரவு சாப்பாட்டை தூங்கச் செல்வதற்கு இரண்டு மூன்று மணி நேரம் முன்பாகவே முடித்து விடுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!