‘இன்பத் தீபாவளி 2019’ நிகழ்ச்சி

தி ஃபிரண்டியர் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் 19ஆம் ஆண்டு ‘இன்பத் தீபாவளி 2019’ விழா நாளை மாலை 6.30 மணிக்கு ஃபிரண்டியர் சமூக மன்றக் கட்டடத்தின் 4வது மாடியில் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சிப் புகழ் வடிவேல் பாலாஜி மற்றும் வசந்தம் ஒளிவழிக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஃபிரண்டியர் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் பயனியர் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு செட்ரிக் ஃபூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிற்றுண்டி, அன்பளிப்புப் பை மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கான கட்டணம் $5. இன்பத் தீபாவளி 2019 @ பயனியர் நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரங்களுக்கு 67958229 எனும் தொலைபேசி எண்ணை அழைக்கவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.