உட்லண்ட்சில் ‘தீப சஹானா’ தீபாவளி கலை நிகழ்ச்சி

உட்குரோவ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவினரின் ஏற்பாட்டில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ‘தீப சஹானா’ எனும் தீபாவளி சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும்.

எண் 9, உட்லண்ட்ஸ் அவென்யூ 9ல் உள்ள ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதிக்கு உட்பட்ட உட்குரோவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஓங் டெங் கூன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக விஜய் தொலைக்காட்சி புகழ்ப் பாடகர்களான திவாகர், ரக்‌ஷிதா ஆகியோருடன் நடனங்கள், உறுமிமேள இசை ஆகியவையும் இடம்பெறும்.

விஜய் தொலைக்காட்சி புகழ் மா.கா.பா. ஆனந்த் நிகழ்ச்சியை வழிநடத்துவார்.

டிக்கெட்டுகளுக்கு உட்குரோவ் சமூக மன்றத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 63669010, 96568153 எண்களில் அழைக்கலாம்.