தீபாவளி கலை நிகழ்ச்சி

இம்மாதம் 16ஆம் தேதி, சனிக்கிழமை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை புக்கிட் பஞ்சாங் சமூக மன்றத்தில் தீபாவளி கலை நிகழ்ச்சி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  

சிறப்பு விருந்தினராக வடமேற்கு வட்டார மேயர் டாக்டர் டியோ ஹோப் பின்னும் அவரது துணைவியாரும் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பல்லின மக்களும் ஒன்றிணைந்து வண்ணமயமான இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

சிறார் முதல் பெரியோர் வரையிலான மக்களுடன் மக்களாக மேயர் டாக்டர் டியோவும் அவரது துணைவியாரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான திருமதி கௌசல்யா ராமச்சந்திராவும் சேர்ந்து தீப விளக்குகளைக் கைகளில் ஏந்தி வருகை புரிந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அன்பளிப்புகள், அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகளும்  இடம்பெற்றன. படம்: புக்கிட் பஞ்சாங் சமூக மன்றம்