முகம்மது யாசிருக்கு கண்ணதாச​ன் விருது

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு முகம்மது யாசிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 36 வயது முகம்மது யாசிர் சலீம், கடந்த 17 ஆண்டுகளாக குறும்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், நாடகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

ஆசிய தொலைக்காட்சி விருது கள், நியூயார்க்கில் நடைபெற்ற உலகின் ஆகச்சிறந்த தொலைக்காட்சி, திரைப்பட விழா ஆகியவற்றில் அவரது படைப்புகள் விருதுகளை வென்றுள்ளன.

இவரது ‘நினைவுகள்’ குறும்படம் ஆசியன் அகாடெமி கிரியேட்டிவ் அவார்ட்ஸ் 2018 விழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வென்றது.

அதே படம் நியூயார்க்கில் உலகின் ஆகச்சிறந்த தொலைக்காட்சி, திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் விருதுகளை வென்றது.

‘கேன் ஹோப்’ எனும் நம்பிக்கை பற்றிய இவரது குறும்படம் 2010ஆம் ஆண்டில் ஒக்டோவின் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்றது.

இவரது மற்ற குறும்படங்களான ஏழாவது மாடி, ஹிஃப்ஸா, கன்னல், பொம்மை ஆகியவையும் விருதுகளை வென்றுள்ளன.

தமிழில் எடுக்கப்பட்டுள்ள இவரது அனைத்துக் குறும்படங்களுக் கும் இவரே திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்ட தமிழர் பேரவையின் தலைவர் வெ. பாண்டியன் கண்ணதாசன் விருதை வழங்கியதுடன் நன்கொடை யாளர்களுக்கு நினைவுப் பொருள்களையும் பாட்டுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற சூர்யா ஆனந்த், சிங்கையில் தமிழ் அறிவிப்பு களில் தவறுகளைத் திருத்தவும் தமிழ் இடம்பெறவும் அரும்பணியாற்றி வரும் மெய்யப்பன், மீடியாகார்ப் தமிழ்ச் சுடர் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கவிஞர் க.து.மு. இக்பால், நா. ஆண்டியப்பன் ஆகியோருக்கு விழாவில் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழான பிரிவில் ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்ற பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார் தனிஷ்கா.

14 வயதுக்கு மேற்பட்ட இருகுரலிசைப் பிரிவில் ‘பெண்ணொன்று கண்டேன்’ பாடலை அருமையாகப் பாடி முதல் பரிசான 300 வெள்ளியை வென்றனர் நண்பர்கள் சொக்கலிங்கம் அரவிந்த், மணிமாறன் மாதவன்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த நகைச்சுவை நாவரசர் புலவர் மா. இராமலிங்கம், ‘காலத்தை வென்ற கவியரசர்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி அனைவரையும் அசர வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!