அவான்டா அகாடெமி பட்டமளிப்பு விழா

வாழ்நாள் கல்வி கற்றல் மையம் (லைப் லாங் லேர்னிங் இன்ஸ்டி டியூட்), சிங்கப்பூரில் நடைபெற்ற அவான்டா அகாடெமியின் பட்டமளிப்பு விழாவில் சுமார் 100 மாணவர்கள் தங்கள் பட்டயப் படிப்புகளுக்கான (டிப்ளமோ, அட்வான்ஸ்ட் டிப்ளமோ) பட்டங் களைப் பெற்றனர். 

அவான்டா அகாடெமியின் நிர்வாக இயக்குநர்  முனைவர் வீ. புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு திரு சந்திரமோகன் ரத்னம், திருமதி மெலிசா மரியா, முனைவர் லீ பெய் பியூங், முனைவர் ரிஸ் தே, திரு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்று மாணவர்களுக்கு பட்ட மளித்து சிறப்பித்தனர். 

பட்டம்பெற்ற மாணவர் திரு கெய் சாங்ஹாங் பேசுகையில்,  அவான்டா அகாடெமி  தனக்கு கற்பதற்கான நல்ல ஒரு அடித்த ளத்தையும் சூழலையும் கொடுத்த தாகக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நிர்வாக இயக்குநர் முனைவர்           வீ.புவனேஸ்வரன் சிறப்பு           விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை அளித்து பட்டம்பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அவான்டா குழும ஊழியர்கள், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.