புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஓராண்டுவரை கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வகை ஆப்பிளைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் எடுத்ததாக கூறப்படுகிறது.

‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்பிரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். 

இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளைக் கண்டறிந்து வணிக ரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (S$13.7 மி.) செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity