ஞாயிறு முதல் தைப்பூச கட்டணச் சீட்டு விற்பனை

ஞாயிறு முதல் தைப்பூச கட்டணச் சீட்டு விற்பனை

1 mins read
c1ef3b89-5c0d-4b2a-a4e6-1a8fe70bf6e0
(படம்: இந்து அறக்கட்டளை வாரியம்) -
Google News Preferred Icon

தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று பால்குடம், காவடி எடுக்க விரும்புவோருக்கான கட்டணச் சீட்டு விற்பனை வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கவிருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. கட்டணச் சீட்டுகளை சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலும் பெற்றுக்கொள்ளலாம் என வாரியத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தைப்பூசத் திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன