சிலப்பதிகாரச் சிந்தனை

எட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து சிலப்பதிகாரச் சிந்தனை என்ற தலைப்பில் சிறந்த ‘வழக்காடு மன்றம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன . 

நாளை மாலை 4.30  மணி  முதல் 6.30 மணி வரை, சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நிகழ்ச்சி நடை

பெறும். 

கண்ணகி, மாதவி இருவரிடமும் கோவலன் நடந்துகொண்ட விதம் சரியே என்பது குற்றம்! என்ற தலைப்பில் நடைபெறுகிற வழக்காடு மன்றத்திற்கு, தமிழக மேடை மற்றும் தொலைக்காட்சி பேச்சாளர் முனைவர் தேவகோட்டை இராமநாதன் நடுவராகப் பொறுப்பேற்பார். சிங்கப்பூரை சேர்ந்த முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் வழக்கைத் தொடுக்க, முனைவர் செல்ல 

கிருஷ்ணன் வழக்கை மறுத்து வாதிடுவார்.    

புத்தாண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சியான இதனைத் தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், ஜமால் முகம் மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், அண்ணா

மலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு, 10 தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள்  ஆகிய எட்டு அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 

அனுமதி இலவசம்.