உமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆதரவுடன் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் நாளை பிற்பகல் 5 மணி முதல் இரவு 8 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் ஒன்றை நடத்துகிறது.

பட்டிமன்றத்தில் இன்றைய இளையர்களிடம் வலியுறுத்த வேண்டியது படிப்பா, பண்பாடா என்று வாதிடப்படும்.

 ‘படிப்பே’ என்ற தலைப்பில் திரு முகமது சரீஃப், செல்வன் கார்த்திகேயன், செல்வி பார்கவி ஆகியோர் வாதிடுகின்றனர். ‘பண்பாடே!’ என்ற தலைப்பில் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன், செல்வன் சுசூகி தர்மராஜ், செல்வி வி‌ஷ்ணுவர்தினி ஆகியோர் எதிர்த்து வாதிடுகின்றனர்.

நகைச்சுவை நாவரசர் புலவர் திரு மா.இராமலிங்கம் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவார்.

சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா கலந்து கொள்கிறார்.

Loading...
Load next