தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பெளத்த கோவிலில் ஒளியூட்டு

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பெளத்த கோவிலில் ஒளியூட்டு

1 mins read
96e893d9-eb22-4861-ac80-a428e61d81b8
(படம்: இணையம்) -

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பெளத்த கோவிலின் ஒளியூட்டு நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள 'கெக் லொக் சீ' ஆலயம் 129 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கம்பீரத்துடன் வீற்றிருக்கும் 33.6 மீட்டர் உயர குவான் இன் சிலையைக் காண பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கூடுவது வழக்கம்.

இந்த ஒளியூட்டில் அமைதியையும் வளப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் வாணவேடிக்கை அங்கங்கள் இடம்பெற்றன.

மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் பினாங்கின் முதல் அமைச்சர் சாவ் கொன் யாவ்வும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

1983ஆம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியை தொடர்ந்து நடத்திய ஆலய நிர்வாகத்தினரைத் திரு லிம் பாராட்டினார்.

இந்த வண்ண விளக்குகள் பிப்ரவரி எட்டாம் தேதி வரை இருக்கும்.