பொன் சுந்தரராசுவின் தன்வரலாற்று நூல் வெளியீடு

1 mins read

திரு பொன் சுந்தரராசுவின் 'முதன்மையாசிரியர் என் வாழ்க்கைப் பயணம்' என்னும் நூல், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் 6.00 மணிவரை வெளியீடு காணவிருக்கிறது.

இது ஒரு தன்வரலாற்று நூல். ஆங்கிலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. கல்வி கற்றல், ஆசிரியர் தொழில், இலக்கியப் பங்களிப்பு, பொதுத்தொண்டு முதலிய துறைகளில் அவர் சந்தித்த சிரமங்கள், எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளதாகத் திரு பொன் சுந்தரராசு கூறுகிறார்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் தினகரன் கலந்துகொள்கிறார். பொதுக்கொள்கை ஆய்வுக் கழகத்தின் சார்புநிலைப் பேராசிரியர் திரு K கேசவபாணி முதன்மை உரையாற்றுகிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பிரிவின் தலைவர் டா்கடர் சித்ரா சங்கரன் வாழ்த்துரையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத்தலைவர் திரு நா ஆண்டியப்பன் நூல் கருத்துரையும் வழங்குவார்கள்.

இடம்: தேசிய நூலக வாரியம், B1 Programme Zone, 100 விக்டோரியா ஸ்திரீட், சிங்கப்பூர் 188064.