கலை ஓவியம் 2020

புத்தாக்க இந்திய கலைகள் மையத்தின் ஏற்பாட்டில் 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு டெசன்சன் ரோடு, சிவில் சர்வீஸ் மன்ற அரங்கில் ‘கலை ஓவியம் 2020’ நிகழ்ச்சி இடம்பெறும். நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை, நவீன இசை, ஆடை அலங்காரக் காட்சி, இந்திய பாரம்பரிய ஓவியக் காட்சி, ஆடல், பாடல் அங்கங்கள் இடம்பெறும். பிரபல உள்ளூர் மூத்த பாடகர் ஒருவருக்கும் மூத்த செய்தியாளர் ஒருவருக்கும் சிறப்பு விருது வழங்கப்படும். தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு ஆளில்லா வானூர்தி அந்தரத்தில் இசைக்குத் தக்கபடி அசைந்தாடுவதைப் பார்க்கலாம். 

மேல் விவரங்களுக்கு: 

எஸ்.குணசேகரன்-9660 1051.