சுடச் சுடச் செய்திகள்

கதைக்களத்தில் சிவசங்கரி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒவ்வொரு மாதமும் நடத்தும் ‘கதைக்களம்’, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ‘ஸூம்’ செயலி மூலம் இணையம் வழி நடக்கிறது.

அதில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளங்களிலும் செம்மையாகச் செயலாற்றும் தமிழகத்தின் எழுத்தாளர் சிவசங்கரி ‘எழுத்தும் நானும்’ என்ற தலைப்பில், காணொளி மூலம் சிறப்புரை ஆற்றுகிறார்.

உள்ளூர் எழுத்தாளர் அறிமுகம் அங்கத்தில் உள்ளூர் எழுத்தாளர், நாடகக்கலை பிரபலம் ச.வரதன் குறித்தும் அவரது படைப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் மாத சிறுகதைப் போட்டிகளுக்கு, மாணவர் பிரிவுக்கு 200 முதல் 300 சொற்களுக்குள் படைப்புகள் இருக்கவேண்டும். பொதுப் பிரிவுக்கு 400 முதல் 500 சொற்களுக்குள் படைப்புகள் இருக்கவேண்டும்.

நீங்கள் வாசித்த சிறுகதையைப் பற்றி 250-300 சொற்களுக்குள் விமர்சனம் எழுதி பரிசுகளை வெல்லலாம். படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு kathaikalam.astw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24/7/2020 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். வெற்றிபெறும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு.

‘ஸூம்’ இணைப்பு: http://singaporetamilwriters.com/kathaikalamzoom/

‘ஸூம்’ கூட்டம் ID: 881 5006 3723; கடவுச்சொல்: kathai

யூடியூப் நேரடி ஒளிவழி: https://bit.ly/3eZPSSG

வெற்றியாளர்களுக்கான பரிசுகளுக்கு நிதி ஆதரவு: மு.கு.இராமச்சந்திரா குடும்பம். மேல்விவரங்களுக்கு: www.singaporetamilwriters.com/kathaikalam/

தொடர்புக்கு: திருமதி பிரேமா மகாலிங்கம் (91696996), திருமதி சி.கிருத்திகா (kiruthikavirku@gmail.com) ஆகியோரை அணுகலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon