முகப்பு அட்டை வடிவமைப்புப் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அதன் முத்தமிழ் விழாவின் வெள்ளி விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. அதனை ஒட்டி வெள்ளி விழா மலர் ஒன்று உருவாகி வருகிறது.

அந்த மலருக்கான முகப்பு அட்டைப் படத்தை உருவாக்க ஒரு போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம்.

அட்டைப் படத்திற்கான கருப்பொருள் முத்தமிழ் விழா. முத்தமிழ் விழாவில் நடனம், மாறுவேடப் போட்டி, மாணவர் படைப்புகள், மூத்த எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது வழங்குதல், சிறப்புரை ஆகிய முக்கிய அங்கங்கள் இடம்பெறும்.

அதன் அடிப்படையில் ஓவியமாகவோ அல்லது மின்னிலக்க வடிவமைப்பாகவோ அட்டைப் படத்தை உருவாக்கலாம்.

அட்டைப் படம் A4 அளவில் வண்ணத்தில் இருக்க வேண்டும். செயலவையால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த அட்டைப் படத்திற்கு $150 வெகுமதி வழங்கப்படும்.

அட்டைப் பட வடிவமைப்பை தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொடுக்க அதனை உருவாக்கியவர் தயாராய் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

வடிவமைப்புகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் aavanna19@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேல் விவரங்களுக்கு கழகத்தின் இணையத்தளத்தை நாடலாம் அல்லது துணைத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் (97849105), செயலாளர் திருவாட்டி கிருத்திகா (kiruthikavirku@gmail.com) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon