புதிய ஐபோன் 12 ரக திறன்பேசிகள் - சிங்கப்பூரில் முன்பதிவு

தொழில்நுட்பப் பெருநிறுவனம் ஆப்பிள், நான்கு புதிய ஐபோன் வடிவங்களை சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை நடைபெற்ற தனது மெய்நிகர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது.

5.4 அங்குல(inch) ஐபோன் 12 மினி(mini), 6.1 அங்குல ஐபோன் 12, 6.1 அங்குல ஐபோன் 12 புரோ மற்றும் 6.7 அங்குல புரோ மெக்ஸ் ஆகியவை இவை. அனைத்து வடிவங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப வசதி உள்ளது.

“இந்நாள் ஐபோனுக்கான புதிய யுகத்தின் தொடக்கமாக உள்ளது. நாங்கள் ஐபோனுக்கு 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுவருகிறோம்,” என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் , வெளியீட்டு நிகழ்ச்சியின்போது கூறினார்.

இந்தப் புதிய வடிவங்கள் பார்ப்பதற்கு பழைய ஐபோன் வடிவங்களைப் போலத் தோன்றினாலும் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் உள்ளன. இந்தப் புதிய வகை ஐபோன்களின் ஓரங்கள் வளைவாக இல்லாமல் தட்டையாக இருக்கும். அத்துடன் அவை ‘ஓஎல்இடி’ திரைகளைக் கொண்டிருக்கும். மேலும், இந்தப் புதிய திறன்பேசிகளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆக அண்மைய தயாரிப்பான ஏ14 பையானிக் சில்லுகள் (chip) பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் சில்லுகள், உலகின் ஆக வேகமானது என்று இத்திறன்பேசிகளின் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!