7 நாட்களுக்குப் பிறகு உரையாடல் மறையும் புதிய அம்சம் ‘வாட்ஸ்அப்’பில் அறிமுகம்

‘வாட்ஸ்அப்’ உரையாடல் செயலியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

ஏழு நாட்களுக்குப் பிறகு உரையாடலில் இடம்பெற்ற செய்திகள் மறைந்துவிடும். 

நவம்பர் மாதத்தில் பயனீட்டாளர்களுக்குக் கட்டம் கட்டமாக இப்புதிய வசதி வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் நேற்று தெரிவித்தது. 

இதனால், செயலிவழி நிகழும் உரையாடல் மேம்படும் என்றும் உரையாடலின் ரகசியத் தன்மை கூடும் என்றும் எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

செய்தி, படங்களைப் பர்த்ததும் மறைந்துவிடக்கூடிய வசதிகளை ‘ஸ்னாப்’ போன்ற செயலிகளில் ஃபேஸ்புக் ஏற்கெனவே சோதித்துப் பார்த்தது. ரகசியத் தன்மையைக் காப்பாற்றும் விதத்தில் வாடிக்கையாளர்களின் அக்கறைகளுக்கேற்ப இந்தப் புதிய அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

‘ஃபிளீட்ஸ்’ எனப்படும் மறையக்கூடிய பதிவுகளை டுவிட்டர் இவ்வாண்டின் தொடக்கத்தில் பரிசோதித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!