சனிப் பெயர்ச்சி: சிறப்பு வழிபாடுகள்

1 mins read
8f9c88f8-6404-446c-bf18-5fb28bd1f702
படம்: ஊடகம் -

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெயர்ச்சி அடைந்தார்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கோயில்களில் இந்த நிகழ்வு தொடர்பாக சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இந்தியாவின் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற சனிபகவான் கோயிலிலும் சனிப்பெயர்ச்சி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அந்தக் கோயிலில் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு கூட்டம் குறைவாகவே இருந்ததாகக் கூறப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கோயில்களில் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்