வர்த்தகத்துக்குக் கைகொடுக்கும் மின் கட்டண முறை

மின்னிலக்கமயமாக்கல் முயற்சிகள் உணவங்காடி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன. மின்னிலக்க முறைக்கு மாறியதன்மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து பயனடைந்த கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.

உண­வுத் துறை­யில் நிபு­ண­ராக சில ஆண்­டு­கள் பணி­யாற்­றிய அனு­ப­வத்­து­டன், சென்ற ஆண்டு, மெக்ஸ்­வெல் உணவு அங்­காடி நிலை­யத்­தில் ஒரு கடையை திரு பாஷா சிராஜ், 39, துவங்­கி­னார். நவீ­னத்­து­வத்­தை­யும் காய்­க­றி­­க­ளின் மேல் அதிக பயன்­பாட்டை வளர்ப்­ப­தை­யும் தமது பாரம்­ப­ரிய இந்­திய உணவு தயா­ரிப்­பில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார் திரு பாஷா. அவ­ரது தயா­ரிப்­பு­கள் சற்றே மித­மான தன்­மை­யா­க­வும் ஆரோக்­கி­யம் நிறைந்த வகை­யி­லும் புத்­தாக்­கத்­து­ட­னும் அமை­கின்­றன.

அத­னால்­தான் அவ­ரது கடைக்கு லக்­மி­யாவ் மாடர்ன் இந்­தி­யன் குசின் என்று பெய­ரிட்­டுள்­ளார். அவ­ரது கடையில், மதிய உணவு நேரங்­களில் அதிக வியா­பா­ரம் இருப்பதாக கூறுகி­றார் திரு பாஷா.

ஆனால் கொவிட் காலத்­தில் அவ­ரது வியா­பா­ரம் பாதிப்­ப­டைந்­தது. மெக்ஸ்­வெல் வட்­டா­ரம் அதிக அலு­வ­லக ஊழி­யர்­க­ளைக் கொண்ட இட­மா­கும். பலர் இல்­லங்­க­ளி­லேயே பணி­யாற்­றி­ய­தும், சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை தடைப்­பட்­டி­ருந்­த­துமே அதன் முக்கிய கார­ணங்­க­ளா­கும்.

கடை­யைத் தொடங்­கிய இரண்டு மாதங்­க­ளி­லேயே மின்­னி­லக்­க கட்­டண முறையை திரு பாஷா அவ­ரது கடை­யில் அறி­மு­கப்­படுத்­தி­விட்டார்.

கொவிட் தொற்று வரா­மல் இருந்­தி­ருந்­தா­லும், மின்­னி­லக்க கட்­டண முறையை அவர் செயல்­ப­டுத்­தி­யி­ருப்­பார் என்று மேலும் கருத்­து­ரைத்­தார். அதன் செயல்­மு­றை­கள் மிக­வும் சுல­ப­மா­னது என்­றும் பதி­வி­றக்­கம் செய்த 5 நிமி­டங்­களில் கட்­ட­ணம் உறுதி செய்­யப்­பட்டு, பயன்­பாட்­டுக்கு தயா­ரா­னது என்­றும் திரு பாஷா விவ­ரித்­தார். ஒரு சில கட்­ட­ணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­குப் பிறகு, மிக­வும் விரை­வாக கட்­டண செயல்­மு­றை­யைத் தாம் கற்­றுக்­கொண்­டு­விட்­ட­தாக அவர் சொன்­னார்.

அவ­ரது மொத்த வாடிக்­கை­யா­ளர்­களில் சுமார் 25 முதல் 50 விழுக்­காட்­டி­னர் மின்­னி­லக்க கட்­டண முறை­யைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

மிக­வும் எளி­மை­யும் சுல­ப­மும் ஆன மின்­னி­லக்­க கட்­டண முறையை தாம் பெரி­தும் விரும்­பு­வ­தா­க­வும், சில்­ல­றைக் கட்­ட­ணங்­கள் வாங்­கு­வதை விட இதையே ஆத­ரிப்­ப­தா­க­வும் திரு பாஷா தெரி­வித்­தார்.

நேரத்தை மிச்­சப்­ப­டுத்தி உற்­பத்­தித் திறனை வளர்க்க மின்­னி­லக்க கட்­டண முறை உத­வு­கிறது. சில்­ல­றை­களை வைத்­துக்­கொள்ள அவ­சி­ய­மில்லை. தவ­றான சில்­லறை வாங்­கு­வ­தை­யும் கொடுப்­ப­தை­யும் தவிர்த்­து­வி­ட­லாம்.

சில்­ல­றைக்­கென்றே ஒரு ஊழி­யரை அமர்த்த வேண்­டி­ய­தில்லை. வியா­பா­ரம் முடிந்து வரவு செலவு கணக்­கு­கள் செய்­யத் தேவை­யின்றி, அனைத்து பரி­வர்த்­த­னை­களும் வங்­கிக் கணக்­கில் நேர­டி­யாக சென்­றடைந்து விடுகின்றன. வங்­கிக்­குச் சென்று வியா­பா­ரத்­துக்­கென்று சில்­லறை மாற்­ற­வும் அவ­சி­ய­மில்லை. கட்­ட­ணத்தை பற்றி கவ­லை­யின்றி, சேவைத்­தி­றனை வளர்த்­துக்­கொள்ள மின்­னி­லக்­க கட்­டண முறை மிக­வும் அத்­தி­யா­வ­சி­ய­மா­கின்­றது.

இத்­தனை பயன்­க­ளைக் கொண்ட இந்த முறையை நிச்­ச­யம் மற்ற கடைக்­கா­ரர்­க­ளுக்கு தாம் பரிந்­து­ரைத்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­களுக்­கும் கட்­ட­ணம் செலுத்­து­வ­தில் பெரும் வச­தி­யாக மின்­னி­லக்­க கட்­ட­ணம் அமைந்­துள்­ளது என்­றும் திரு பாஷா சிராஜ் (மேல் படம்) வலி­யு­றுத்­தி­னார்.

 

எளிமையான வர்த்­த­கப் பரி­வர்த்­த­னை­

மளி­கைப் பொருள் விற்­கும் கடையை ஈராண்­டு­க­ளுக்­கும் மேலாக நடத்தி வரு­கி­றார் 39 வயது திரு கோபால் ஜெயந்­தன். பல­வித மளி­கைப் பொருட்­களை விற்­கும் இவ­ரது கடை வாரம் ஏழு நாட்­களும் திறந்­தி­ருக்­கும். திங்­கட்­கி­ழமை மட்­டும் அரை நாள் திறந்­தி­ருக்­கும். வார­யி­றுதி நாட்­களில் கூட்­டம் அதி­க­மாக இருக்­கும். கொவிட் கட்­டுப்­பாடு காலத்­தில் அவ­ரது வர்த்­த­கம் பெரி­தும் பாதிப்­ப­டைந்­தது.

கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னர் மின்­னி­லக்­க கட்­டண முறையை தமது கடை­யில் அறி­மு­கப்­ப­டுத்­திய திரு கோபால் ஜெயந்­தன், சிங்­கப்­பூ­ரின் மின்­ன­லக்­க­ம­ய­மா­கும் முறை பல­ருக்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்­றார். அர­சாங்­கத்­தின் இந்­தத் திட்­டங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளில் 10 விழுக்­காட்­டி­னர், அதி­லும் குறிப்­பாக இளை­யர்­களும் வெளி­நாட்டு ஊழி­யர்­களும் மின்­னி­லக்­கக் கட்­டண முறை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தாக திரு கோபால் குறிப்­பிட்­டார்.

மின்­னி­லக்­க கட்­ட­ண முறை மிக­வும் பாது­காப்­பா­னது, எளி­மை­யா­னது என்ற திரு கோபால், ரொக்­கத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக மின்­னி­லக்­க ­கட்­டண முறை­யையே தாம் விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

“சில்­லறை மாற்றி வைத்­துக்­கொள்­ளத் தேவை­யில்லை, சரி­யாக பணத்தை வாங்­கி­னோமா, மீதி கொடுத்­தோமா என்று கணக்­குப் பார்க்­கத் தேவை­யில்லை. மேலும் சில நேரங்­களில் கையில் ரொக்­கப் பணம் இல்­லா­மல் வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் முன்­னர் ஏடி­எம்­மில் சென்று பணம் எடுத்­து­வ­ரச் சொல்­வேன். இத­னால் வாடிக்­கை­யா­ளர்­களை இழக்க நேரிட்­டுள்­ளது. இப்­போது இத்­த­கைய பிரச்­சி­னை­கள் இல்லை,” என்­றார் அவர்.

எவ்­வ­ளவு சிறிய கடை­யாக இருந்­தா­லும் மின்­னி­லக்க முறை­யைப் பயன்­ப­டுத்­து­வதே சிறந்­தது என்ற திரு கோபால், எல்லா வர்த்­த­கர்­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் மின்­னி­லக்க முறைக்கு மாறு­வதே சிறந்­தது எனக் கூறி­னார்.

 

விளம்பரச் செய்தி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!