சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தவல்ல வேதிப்பொருள்கள் துரித உணவுகளில் உள்ளன: ஆய்வு முடிவுகள்

நெகிழிப் பொருள்களை மென்மையானதாக்கப் பயன்படுத்தப்படும் ‘தாலேட்’ எனும் வேதிப்பொருள், மெக்னோல்ட்ஸ், பர்கர் கிங், பீட்சா ஹட், டோமினோஸ் உள்ளிட்ட முன்னணி துரித உணவுக்கடைகளில் இருந்து வாங்கிய உணவுப்பொருள்களில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்த உணவுக்கடைகளில் இருந்து ஹம்பர்கர், ஃபிரைஸ், சிக்கன் நக்கெட், சிக்கன் பரிட்டோ, சீஸ் பீட்சா உள்ளிட்ட 66 உணவுவகைகளை ஆய்வாளர்கள் வாங்கி ஆய்விற்கு உட்படுத்தினர். அவற்றில் 80% உணவுவகைகளில் ‘டிஎன்பிபி’, 70% உணவுவகைகளில் ‘டிஇஎச்பி’ ஆகிய ‘தாலேட்’டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இவ்விரு வேதிப்பொருள்களும் இனப்பெருக்கச் சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.


நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிக்கவல்ல ‘தாலேட்’டுகள், அழகுசாதன்ப் பொருள்கள், சலவைப்பொருள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கையுறைகள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.


ஆஸ்துமா, குழந்தைகளிடம் மூளை பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் அபாயத்தையும் ‘தாலேட்’டுகள் கொண்டுள்ளன.


இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன், டெக்சஸில் உள்ள சௌத்வெஸ்ட் ஆய்வுக் கழகம், போஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் இவ்வார ‘வெளிப்பாட்டு அறிவியல், சுற்றுப்புற நோய்த்தொற்றியல் சஞ்சிகை’யில் வெளியாகியுள்ளது.


சிக்கன் பரிட்டோ, சீஸ்பர்கர் போன்ற இறைச்சி அடங்கிய உணவுவகைகளில் அந்த வேதிப்பொருள்கள் அதிகளவிலும் சீஸ் பீட்சாவில் குறைந்த அளவிலும் இருந்ததாகக் கூறப்பட்டது.


ஆயினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் சுகாதாரப் பாதுகாப்பு வரம்புகளுக்குக் குறைவாகவே ‘தாலேட்’டுகளின் அளவு இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!