தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆகப் பெரிய விற்பனைத் திருவிழாவில் சன்னி லியோன்!

1 mins read
638519c2-d203-45bc-8647-20a74bbd6851
-

துபாயில் அமைந்துள்ள உலக வணிக மையத்தில் நாளை மறுநாள் 25ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை உலகின் ஆகப் பெரிய 'சிபிபிசி' விற்பனைத் திருவிழா நடக்கவிருக்கிறது.

இதனையொட்டி, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கும் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, விற்பனைத் திருவிழாவைக் தொடங்கிவைக்க இருக்கிறார் இந்தித் திரையுலக நடிகையான சன்னி லியோன்.

இந்த விற்பனைத் திருவிழாவில், 'ஸ்டார்ஸ்ட்ரக்' எனும் பெயரில் தாம் அறிமுகப்படுத்தும் பெண்களுக்கான புதிய அழகுசாதனப் பொருள்களையும் அவர் விற்பனைக்கு வைக்கவிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய சன்னி லியோன், "திரைப்பட விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அண்மையில் துபாய் சென்றிருந்தேன். இப்போது 'சிபிபிசி' விற்பனைத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மீண்டும் அங்கு செல்லவிருக்கிறேன்," என்றார்.

"விற்பனைத் திருவிழாவிற்கு சன்னி லியோன் வருவதைக் கௌரவமாகக் கருதுகிறோம்," என்று அந்த விற்பனைத் திருவிழாவின் நிறுவனரும் தலைவருமான விஜய் சம்யானி.