திருமலை பெருமாளைத் தரிசிக்க ஒன்றரை கோடி ரூபாய்!

1 mins read
78389e18-2874-458f-adf4-e7b46da4faae
நாள் முழுவதும் ஆலயத்தில் தங்கி இருந்து திருமலை வெங்டேசரை தரிசனம் செய்ய  ரூ 1 கோடி, ரூ.1.50 கோடி உதய அஸ்தமன சேவை கட்டணங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. படம்: இணையத்தளம் -

நாள் முழுவதும் ஆலயத்தில் தங்கி இருந்து திருமலை வெங்டேசரை தரிசனம் செய்ய ரூ 1 கோடி, ரூ.1.50 கோடி உதய அஸ்தமன சேவை கட்டணங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்ய ரூ.1.50 கோடியும் மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும்.

உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை வரை, இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் தரிசிக்கலாம்.

வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. ஒரு டிக்கெட்டில் அறுவர் செல்லலாம்.

இந்த வசதியை நன்கொடையாளர் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒருமுறை கட்டணம் செலுத்தி, பிரம்மோற்சவம், சிறப்பு வழிபாட்டு தினங்கள் தவிர்த்த ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் நன்கொடையாளர் தனது ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தரிசிக்கலாம்.

முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற அடிப்படையில் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.

நேரிலும் இணையத்திலும் இந்த கட்டணச் சீட்டுகளை வாங்கலாம்.

உலகிலேயே பணக்கார இந்துக் கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் விளங்கி வரும் திருப்பதி, வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான நவீன குழந்தைகள் மருத்துவமனையை கட்ட உள்ளது.

அதற்கு ரூ.550 கோடி நிதி திரட்டும் நோக்கில் இந்த உதய அஸ்தமன சேவை தொடங்கப்பட்டுள்ளது.