கிட்டப் பார்வைக்கு உதவும் கண் சொட்டு மருந்து

கிட்டப் பார்வைக்காக மூக்குக் கண்ணாடி அணிவோருக்கு அமரிக்காவில் நல்வழி பிறந்திருக்கிறது.

கிட்டப் பார்வையை மேம்படுத்தும் கண் சொட்டு மருந்தை (Eye drop) அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

'வுய்ட்டி' (Vuity) எனும் அந்தக் கண் சொட்டு மருந்தை, மருத்துவர்கள் எழுதித் தந்தால் வாங்கலாம்.

அமெரிக்க உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அக்டோபர் மாத இறுதியில் இந்த மருந்துக்கு ஒப்புதல் வழங்கியது.

ஒரு நாளுக்கு ஒரு முறை அந்த சொட்டு மருந்தை கண்ணில் விட வேண்டும்.

அதை அடுத்து, ஒருவரது கிட்டப் பார்வை மேம்படும்.

இதனால் தூரப் பார்வையில் எந்த பாதிப்பும் மாற்றமும் ஏற்படாது.

கிட்டப் பார்வை கண்ணாடியை அணிய விரும்பாதவர்களுக்கு இது நல்ல மாற்றுத் தெரிவாக இருக்கும் என்று ராச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்காட் மெக்ரே கூறினார்.

இருப்பினும் மிதமான அல்லது இலேசான கிட்டப் பார்வை உள்ள 45 முதல் 55 வயதானவர்களுக்குத்தான் 'வுய்ட்டி' கண் சொட்டு மருந்து அதிக செயல்திறனும் வேலை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சொட்டு மருந்தைப் பயன்படுத்திய சிலருக்கு இலேசான தலைவலி போன்ற பக்கவிளைவுகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

முப்பது நாள்களுக்குத் தேவையான சொட்டு மருந்துக்கான விலை சுமார் 80 அமெரிக்க டாலர், அதாவது 110 சிங்கப்பூர் வெள்ளியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!