வெந்நீரால் கிட்டும் நன்மைகள்

வெந்நீரால் கிட்டும் நன்மைகள்

2 mins read
431464fe-9f50-4965-af82-653831be203e
-

உடல்­ந­லத்­தைப் பேண போதிய நீர் அருந்­து­வது அவ­சி­யம். உட­லின் வளர்­சிதை மாற்­றத்­திற்­கும் ஆரோக்­கி­யத்­திற்­கும் ஒரு­நா­ளைக்கு எட்டு முதல் பத்­துக் குவளை நீர் அருந்த வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இத்­த­கைய முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நீரைச் சூடான நிலை­யில் அருந்­து­வது இன்­னும் பல நன்­மை­களைத் தரும்.

வெந்­நீர் அருந்­து­வ­தைப் பழக்­க­மாக்­கிக்கொள்­வது ஒரு­வ­ரின் உடல்­ந­லத்­திற்கு நம்ப முடி­யாத பல நற்­ப­யன்­க­ளைத் தரும் என்­பது மருத்­துவ வல்­லு­நர்­க­ளின் கருத்து.

"பாரம்­ப­ரிய, மாற்று மருத்­துவ முறை­கள் வெந்­நீ­ருக்­கும் உடல்­நலத்­திற்­கும் தொடர்பு இருப்­ப­தைக் குறிப்­பி­டு­கின்­றன. அத­னால், வெந்­நீர் அருந்­து­வ­தைப் பழக்­க­மாக்­கிக்­கொள்­வது நல்­லது," என்­கி­றார் ஆயுர்­வேத மருத்­து­வர் டாக்­டர் நித்­திகா கோஹ்லி.

வெந்­நீர் அருந்­து­வ­த­னால் ஏற்­படும் பயன்­களை அவர் 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' நாளி­த­ழு­டன் பகிர்ந்து­கொண்­டார்.

மூக்­க­டைப்­பிலிருந்து விடு­தலை

மூக்­க­டைப்பு ஏற்­ப­டு­வது ஒரு­வருக்கு எரிச்­ச­லா­க­வும் அசௌ­கரி­ய­மா­க­வும் இருக்­கும். சளி பிடித்­துக்­கொள்­வ­தால் ஏற்­படும் மோச­மான பக்­க­வி­ளைவு இது.

இந்­நி­லை­யில், "ஒரு குவளை வெந்­நீர் அருந்­து­வது மூக்­க­டைப்­பில் இருந்து விடு­விக்­கும்," என்­கி­றார் டாக்­டர் நித்­திகா.

மலச்­சிக்­க­லைப் போக்கும்

ஒரு­வ­ரின் உட­லில் நீர்ச்­சத்து குறைந்­து­போ­வது மலச்­சிக்­கல் ஏற்­படு­வ­தற்­கான முக்­கி­யக் கார­ணங்­களில் ஒன்று என்­பது டாக்­டர் நித்தி­கா­வின் கருத்து.

"குடல் இயக்­கம் மேம்­பட்டு, மலச்­சிக்­க­லில் இருந்து மீள, தண்­ணீர் அல்­லது வெந்­நீர் அருந்­து­வது நல்ல வழி," என்­கி­றார் அவர்.

தலைமுடிக்கு நல்­லது

வெந்­நீர் அருந்­து­வ­தால் தலை­யின் மேற்­தோல் வறண்­டு­போ­கா­மல் தடுக்­கப்­பட்டு, முடி­யின் ஆரோக்­கி­யம் மேம்­படும்.

வலி­யைக் குறைக்­கும்

மாத­வி­டாய்க் காலங்­களில் பெண்­க­ளுக்கு ஏற்­படும் வலி­யைக் கட்­டுப்­ப­டுத்த வெந்­நீர் உத­வும். "அவ்­வப்­போது வெந்­நீர் அருந்­து­வது மாத­வி­டா­யின்­போது ஏற்­படும் வலி­யைக் குறைக்க உத­வும்," என்­கி­றார் டாக்­டர் நித்­திகா.

தோல் பரா­ம­ரிப்பு

வெந்­நீர் ஒரு­வ­ரது தோலில் அற்­பு­தங்களை ஏற்­ப­டுத்­த­லாம்.

"வெந்­நீர் அருந்­து­வது தோலில் சுருக்­கம் விழு­வதை மெது­வாக்­கும்; பருக்­க­ளை­யும் கரும்­புள்­ளி­க­ளை­யும் அகற்­றும்," என்­பது டாக்­டர் நித்­தி­கா­வின் கருத்து.

செரி­மா­னம் மேம்­படும்

காலை எழுந்­த­தும் வெந்­நீர் அருந்­து­வது செரி­மா­னத்தை மேம்­படுத்­தும். வயிறு உப்­பு­தல், அமி­லப் பிரச்­சினை, வாய்­வுக் கோளாறு போன்றவற்றையும் போக்­கும்.

நச்­சு­களை அகற்­றும்

"சூடான அல்லது மிதமான சூட்டுடன் நீர் அருந்­து­வது உட­லில் உள்ள நச்­சு­களை அகற்­றும்," என்­கி­றார் டாக்­டர் நித்­திகா.