வாட்ஸ்அப் உரையாடலை ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாற்ற வசதி

வாட்ஸ்அப் உரையாடலை ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாற்ற வசதி

2 mins read
968b6f5d-d366-425e-9aa6-811729992308
-

வாட்ஸ்­அப் உரை­யா­டல்­களை ஆண்ட்­ராய்ட் திறன்­பே­சி­யில் இருந்து புதிய ஐபோ­னுக்கு மாற்­றும் வச­தியை 'மெட்டா' நிறு­வனம் விரை­வில் வழங்க இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி இருக்­கிறது.

இப்­போது, புதி­தாக ஐபோன் வாங்­கு­வோர் தங்­க­ளது ஆண்ட்­ராய்ட் திறன்­பே­சி­யில் இருந்து வாட்ஸ்­அப் உரை­யா­டல்­களை எந்த வழி­யி­லும் பரி­மாற்­றம் செய்ய இய­லாது.

இருப்­பி­னும், சில சாம்­சுங், கூகல் பிக்­சல் திறன்­பே­சி­களில் இருந்து வாட்ஸ்­அப் உரை­யா­டல்­களை ஐபோ­னுக்கு மாற்­றும் வசதியை 'மெட்டா' நிறு­வ­னம் கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இப்­போது அந்த வச­தியை அதி­க­மான ஆண்ட்­ராய்ட் திறன்­பே­சி­களில் அறி­மு­கப்­ப­டுத்த அந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

வாட்ஸ்­அப் குறித்த அண்­மைய தக­வல்­களை வெளி­யி­டும் 'டபிள்­யூ­ஏ­பீட்­டா­இன்ஃபோ' தளம் மூல­மாக இது தெரி­ய­வந்து உள்ளது.

வாட்ஸ்­அப் உரை­யா­ட­லைப் பரி­மாற்­றம் செய்­வ­தற்­குப் பய­ன­ரின் ஒப்­பு­த­லைக் காட்­டும் படம் ஒன்­றை­யும் அச்­செய்தி காட்­டு­கிறது.

ஆனா­லும், இந்த வசதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட சிறி­து­கா­லம் ஆக­லாம் என்று அச்­செய்தி கூறு­கிறது.

கடந்த செப்­டம்­ப­ரில் வாட்ஸ்­அப் வெளி­யிட்ட 'பீட்டா' பதிப்­பின்­மூ­லம் ஆண்ட்­ராய்ட் திறன்­பே­சி­யில் இருந்து தங்­க­ளது உரை­யா­டல்­க­ளுக்கு ஐபோ­னுக்கு மாற்­றும் வசதி விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் எனக் கோடி­காட்­டி­யி­ருந்­தது.

இப்­படி வாட்ஸ்­அப் உரை­யா­டலை மாற்­றிக்­கொள்ள 'லைட்­னிங் - யுஎஸ்பி சி' கம்­பி­வ­டத்­தைப் பய­னர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­க­லாம். அத்­து­டன், இதற்கு ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் 'மூவ்' செய­லி­யை­யும் பய­னர்­கள் தங்­க­ளது ஆண்ட்­ராய்ட் திறன்­பே­சி­யில் நிறுவ வேண்­டி­யி­ருக்­கலாம்.

சாம்­சுங் திறன்­பே­சி­களில் இருந்து வாட்ஸ்­அப் உரை­யா­டல்­க­ளைப் புதிய ஐபோ­னுக்கு மாற்­றும் வசதி கடந்த ஆண்டு ஆகஸ்ட்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, கூகல் பிக்­சல் திறன்­பே­சி­களில் 2021 அக்­டோ­ப­ரில் அவ்­வ­சதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆண்ட்­ராய்ட் 12 இயங்­கு­த­ளத்­தைக் கொண்­டி­ருக்­கும் அந்­நி­று­வ­னங்­க­ளின் திறன்­பே­சி­களில் இவ்­வ­சதி இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.