கொவிட்-19 தடுப்பூசியால் கருவுறும் திறன் பாதிக்கப்படாது

கொவிட்-19 தடுப்பூசியால் கருவுறும் திறன் பாதிக்கப்படாது

2 mins read
c2af020d-3bd5-4893-809a-0dd13596a1a1
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் ஒரு­வர் கரு­வுற முடி­யா­மல் மலட்­டுத்­தன்மை ஏற்­பட்­டு­வி­டும் என்ற வதந்­தி­களை அண்­மைய ஆய்வு முடி­வு­கள் பொய்­யாக்­கி­யுள்­ளன.

கரு­வு­றும் திறனை கொவிட்-19 தடுப்­பூசி பாதிக்­காது என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் அந்த ஆய்­வுக் கட்­டுரை 'அமெ­ரிக்க நோய்த்­தொற்­றி­யல் சஞ்­சிகை'யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஃபைசர்-பயோ­என்­டெக், மொடர்னா அல்­லது ஜான்­சன் அண்ட் ஜான்­சன் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தம்­ப­தி­ய­ரி­டம் அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. அதில், கரு­வு­று­த­லுக்­கும் தடுப்­பூ­சிக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

ஆயி­னும், கொவிட்-19 தொற்­றிய ஆண்­க­ளி­டத்­தில் கரு­வு­றச் செய்­யும் திறன் தற்­கா­லி­க­மா­கக் குறை­ய­லாம் என்­பதை ஆய்வு முடி­வு­கள் காட்­டின. அதே நேரத்­தில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன்­மூ­லம் அத­னைத் தவிர்க்­க­லாம் எனக் கூறப்­பட்­டது.

கரு­வு­றும் திற­னைப் பாதித்­து­வி­ட­லாம் என்­பதே இன்­னும் தாங்­கள் கொவிட்-19 தடுப்­பூசி போடா­மல் இருக்­கக் கார­ணம் என்று பல­ரும் கூறி­ய­தா­கச் சொன்­னார் போஸ்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்வு துணைப் பேரா­சி­ரி­யர் டாக்­டர் அமெ­லியா வெச­லிங்க்.

"குழந்தை பெற்­றுக்­கொள்ள முய­லும் இணை­யர்­க­ளி­டம் ஆய்வு மேற்­கொண்­டோம். அதில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கும் கரு­வு­று­த­லுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை எனத் தெரி­ய­வந்­தது," என்­றார் அவர்.

ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில் அமெ­ரிக்கா, கன­டா­வைச் சேர்ந்த 2,126 பெண்­களும் அடங்­கு­வர்.

குறைந்­தது ஒரு தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பெண்­க­ளின் கரு­வுறு விகி­த­மும் தடுப்­பூசி போடாத பெண்­க­ளின் கரு­வுறு விகி­த­மும் கிட்­டத்­தட்ட சம­மாக இருந்­தது ஆய்­வில் கண்­ட­றியப்­பட்­டது.

குழந்தை பெற்­றுக்­கொள்ள முய­லும் இணை­யர்­க­ளி­டத்­தில், ஆண் அல்­லது பெண் இரு­வரில் எவ­ரே­னும் ஒரு­வர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் அத­னால் கரு­வு­றும் திறன் பாதிக்­கப்­ப­டாது என்­பதை எங்­க­ளது ஆய்­வுத் தர­வு­கள் மறு­வு­று­திப்­படுத்­து­கின்­றன," என்­றார் அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நோய்த்­தொற்­றி­யல் பேரா­சி­ரி­யர் டாக்­டர் லாரன் வைஸ்.

கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு மாத­வி­டாய் சுழற்­சிக் காலத்­தில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­யின. அத­னால், தடுப்­பூ­சி­யால் கருத்­தரிப்­பது என்ற அச்­சம் எழுந்­தது. அந்த அச்­சத்­தைப் போக்­க­வும் புதிய தர­வு­கள் உதவி­யிருப்­ப­தாக ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்தனர்.