டிக்டாக் செயலியை பின்னுக்குத் தள்ளியது இன்ஸ்டகிராம்

டிக்டாக் செயலியை பின்னுக்குத் தள்ளியது இன்ஸ்டகிராம்

1 mins read

சீனாவின் டிக்டாக் செயலியை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இன்ஸ்டகிராம் உருவெடுத்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் ஆக அதிகமானோரால் இன்ஸ்டகிராம் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சென்சார் டவர் என்னும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. உலகத் தரவரிசையில் இன்ஸ்டகிராம் செயலியை அடுத்து இரண்டாவது இடத்தை டிக்டாக் செயலியும் மூன்றாவது இடத்தை ஃபேஸ்புக் செயலியும் பிடித்துள்ளன.