இணைய மோசடிக்காரர்களுக்கு எளிதாய் கிடைக்கும் கருவிகள்

இணைய மோசடிக்காரர்களுக்கு எளிதாய் கிடைக்கும் கருவிகள்

2 mins read
85f6f53c-4d04-4225-9377-ba32d962aecc
-

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட தொழில்­நுட்­பத்­தில் முன்­னிலை வகிக்­கும் பல நாடு­கள் மின்­னி­யல் மோசடி­களைத் தடுக்க முடி­யா­மல் தடு­மா­றிக் கொண்­டி­ருக்­கின்­றன. குறுந்­த­க­வல், மின்­னஞ்­சல் வாட்ஸ்­அப், மற்­றும் பல்­வேறு செய­லி­கள் வாயி­லாக மோச­டிப் பேர்­வ­ழி­கள் நாள்­தோ­றும் பல்­லா­யி­ரக் கணக்­கா­னோரை ஏமாற்றி அவர்­க­ளின் வாழ்­நாள் சேமிப்பை சுரண்டி வரு­கின்­ற­னர்.

இது­போன்ற மோச­டிக்­கா­ரர்­கள் தங்­கள் ஏமாற்று வேலை­க­ளுக்­கென சிறப்­பான மென்­பொருள் கரு­வி­கள் எதை­யும் உரு­வாக்­க­வில்லை. அவர்­கள் பயன்­ப­டுத்­தும் முக்­கால்­வாசி கரு­வி­கள் இணை­யத்­தி­லேயே எளி­தா­கக் கிடைக்­கின்­றன என்­கின்­ற­னர் மென்­பொ­ருள் நிபு­ணர்­கள். அர­சாங்­கத் துறை­கள், வங்­கி­கள் அனுப்­பு­வ­தைப் போன்ற அதே அடை­யா­ளங்­க­ளு­டன் கூடிய போலிக் குறுந்­த­க­வல்­களை அனுப்ப இணை­யத்­தில் கிடைக்­கும் மென்­பொ­ருள் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் மோச­டிக்­கா­ரர்­கள். அக்­க­ரு­வி­கள் சில­வற்­றுக்கு எவ்­வி­தக் கட்­ட­ண­மும் இல்லை. அப்­ப­டியே கட்­ட­ணம் கொடுத்து வாங்­கு­வ­தாக இருந்­தா­லும் மிக­வும் சொற்ப காசுக்­குக் கிடைக்­கும்.

இந்­த மின்­னி­யல் கரு­வி­கள் மூலம் தக­வல் அனுப்­பு­ந­ரின் தொலை­பேசி எண் மறைக்கப்பட்டு, அதற்­குப் பதி­லாக ஏதோ ஒரு பெய­ரில் அந்­தத் தக­வல் நம்மை வந்­த­டை­யும். அந்­தத் தக­வ­லு­டன் ஏதே­னும் இணை­யத்­தளத்­திற்­கான இணைப்­புக் குறி­யீடு இருந்து அதை நாம் சொடுக்­கி­னால், நாம் மோச­டிக்­கா­ரர்­க­ளின் வலை­யில் விழ வாய்ப்பு உண்டு.

இவ்­வாறு பெயர்­களில் உலா வரும் தக­வல்­க­ளைத் தடுத்து வைத்­தா­லும் அதே தக­வல்­கள் வெவ்­வேறு பெயர்­களில் வந்த வண்­ணம் இருக்­கும். சில­ச­ம­யம் வித்­தி­யா­ச­மாக +44, +46, +65 என்ற எண்­கள் உள்­ளிட்ட பல மாறு­பட்ட எண்­களில் தொடங்­கும் தொலை­பேசி எண்­களில் இருந்­தும் 'குறைந்த வட்­டி­யில் கடன் தரு­கி­றோம்' என்­பன போன்ற கவர்ச்­சி­மிகு வாச­கங்­க­ளு­டன் குறுந்­த­க­வல்­கள் வரும்.

குறுந்­த­க­வல்­க­ளால் மட்­டும் மோச­டிக்­கா­ரர்­கள் தங்­கள் கைவ­ரி­சை­யைக் காட்­ட­வில்லை.

ஒரு வங்­கி­யின் இணை­யத் தளத்­தைப் போலவே அச்சு அச­லாக போலி இணை­யத் தளத்தை உரு­வாக்கி அதன் மூலம், வங்­கி­யின் இணை­யப் பய­னா­ளர்­க­ளின் விவ­ரங்­க­ளைத் திருடி மோசடி வேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது­போன்ற தந்­தி­ர­மான மோச­டி­களில் சிக்­கா­மல் இருப்­ப­தற்கு, கவர்ச்­சி­க­ர­மான விளம்­ப­ரங்­க­ளு­டன் வரும் மின்­ம­ட­லில் வரும் இணைய முக­வரி இணைப்­புக்­கு­றியை அழுத்­துவதைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை தாங்­கள் இணை­யத்­தில் செல்­லக்­கூ­டிய வங்­கி­யின் முக­வ­ரியை தட்­டச்சு செய்து செல்­ல­லாம். அல்­லது அந்­தந்த வங்­கி­க­ளின் செய­லி­க­ளின் மூலம் இணைய வங்­கிச் சேவை­க­ளைப் பெறு­வ­தால் இது­போன்ற மோச­டி­களில் சிக்­கா­மல் நம்­மைப் பாது­காத்­துக்­கொள்­ள­லாம். இருப்­பி­னும், மின்­னி­யல் சேவை வழங்­கும் வங்­கி­க­ளின் பாது­காப்பு மேலும் வலு­வ­டைய வேண்­டும் என்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்.