பிரிட்டன், கனடா, அமெரிக்காவில் தமிழர் சிறப்பு போற்றும் தைத் திருநாள்

தமி­ழர் திரு­நா­ளான தைத்திரு­நாளை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, தை மாதத்­தைத் தமிழ்ப் பாரம்­ப­ரிய மாத­மாக உல­கெங்­கும் தமி­ழர்­கள் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

அர­சி­யல் தலை­வர்­க­ளின் வாழ்த்­தும், பங்­கேற்­பு­மாக பெரிய அள­வி­லான விழா­வாக தமி­ழ­ரின் தைத் திரு­நாள் ஆண்­டுக்­காண்டு உல­க­ள­வில் தமி­ழ­ரின் அடை­யா­ள­மாக பரி­ண­மித்து வரு­கிறது.

ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து ஆகிய நாடு­களில் கோடைக்­கால விழா­வா­க­வும் ஐரோப்­பா, அமெ­ரிக்கா, கனடா போன்ற நாடு­களில் குளிர்­கால விழா­வா­க­வும் பொங்­கல் கொண்­டாட்­டப்­பட்­டது.

பிரிட்­ட­னும் கன­டா­வும் ஜன­வரி மாதத்தை 'தமிழ் மர­பு­ரி­மைத் திங்கள்' ஆகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­, தைத்திருநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன.

தமி­ழர்­க­ளின் தொன்மை, வர­லாறு, கலை, பண்­பா­டு­கள் அந்நாடு­களில் மேன்­மை­பெ­றச் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் அந்த நா­டு­க­ளின் தமிழ் மக்­களும் அமைப்­பு­களும் முழு முயற்­சி­யு­டன் செயல்­பட்டு வரு­கின்­றன.

தமிழ் மரபுடைமை மாதமாக ஜனவரி

பல இன கலா­சா­ரங்­கள் செழிக்­கும் பெரு­ந­க­ரங்­களில் ஒன்­றான லண்­ட­னில் முதன்­மு­றை­யாக இந்த ஆண்டு தமி­ழர் மர­பு­டமை மாதம் கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது.

இங்­கி­லாந்து முழு­வ­தும் பிரிட்­டிஷ் அமைச்­சர்­களும் அர­சி­யல் தலை­வர்­களும் தங்­கள் தொகுதி மக்­க­ளு­டன் தமி­ழ­ரின் அறு­வடைத் திரு­நா­ளான தைப் பொங்­க­லைக் கொண்­டா­டி­னர்.

பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தனது அறிக்­கை­யில், "நீண்ட கால­மாக பிரிட்­டிஷ் வாழ்க்­கை­யின் ஓர் அங்­க­மாக தமி­ழர்­கள் பின்­னிப் பிணைந்­துள்­ள­னர். தமி­ழர்­கள் இல்­லை­யெனில் நமது நாட்­டில் ஒரு பெருங்­குறை இருக்­கும்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

லண்­டன் சோஆஸ் பல்­க­லைக்­கழக வளா­கத்­தில் கலை நிகழ்ச்­சி­க­ளு­டன் பொங்­கல் கொண்­டா­டப்­பட்­டது. இசை, நடனம், அறுசுவை விருந்தோடு நடந்த இவ்விழாவில் தமிழ் ஆய்வுக்காக, பிரிட்டன் தமிழ்க்கல்வி ஆதரவுடன் 150,000 பவுண்ட்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில் லண்­டன் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிக்­கோ­லஸ் ரோஜர்ஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

'இங்­கி­லாந்­தின் தேசிய நல்வாழ்வு சேவைத் துறை­யில் இந்­தியா, இலங்கை உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்­பட்ட தமி­ழர்­கள் மருத்­து­வர்­க­ளா­க­வும் செவி­லி­யர்­க­ளா­க­வும் முன்­கள மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளா­க­வும் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்.

"ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் லண்­டன் பள்­ளி­களில் ஆசி­ரி­யர்­க­ளா­கப் பணி­யாற்­று­கின்­ற­னர். முதி­யோ­ருக்­கான நூற்­றுக்­கும் மேற்­பட்ட பாது­காப்­ப­கங்­கள் தமி­ழர்­க­ளால் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆஸ்ட்ரா ஸெனேக்கா தடுப்­பூ­சியை உரு­வாக்­கி­ய­தி­லும் தமிழ் அறி­வி­ய­லா­ளர்­க­ளின் பங்­க­ளிப்பு உண்டு," என்று நிக்­கோ­லஸ் ரோஜர்ஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.

லண்­டன் வெம்­பிலி பகுதி சமூக நிலைய முன்­ற­லில் லண்­டன் தமிழ் வணி­கர்­கள் பொங்­கல் விழாவை நடத்­தி­­னர்.

பிரிட்­டன் நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் பிரிட்­டிஷ் தமிழ்ச் சமூக அமைப்­பி­னால் கடந்த 17ஆம் தேதி பொங்­கல் கொண்­டா­டப்­பட்­டது.

கனடாவில் சிறக்கும் தமிழ்

கன­டா­வில் 2010லிருந்து தமிழ்ப் பாரம்­ப­ரிய மாதம் கொண்­டா­டப்­படு­கிறது. கன­டா­வில் வாழும் தமி­ழர்­கள் அந்­நாட்­டின் சமூக, பண்­பாடு, அர­சி­யல், பொரு­ளா­தா­ரத்­துக்கு அளித்­துள்ள பங்­க­ளிப்­பு­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் அந்­நாட்டு நாடா­ளு­மன்­றம் தமிழ்ப் பாரம்­ப­ரிய மாதத்தை 2016ல் அதி­கா­ர­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொண்­டது.

கலிஃபோர்னியாவில் தமிழ் மாதம்

அமெ­ரிக்­கா­வில் கலி­ஃபோர்­னியா மாகா­ணத்­தின் சாக்ர மெண்டோ தமிழ் மன்றத்தின் முன்னெடுப்பில் முக்­கிய நக­ரங்­க­ளான போல்­சோம், ரோஸ்­வில், ராக்­லின், ரான்­சோ­கோர்­டோவா ஆகிய நக­ரங்­களில் ஜன­வரி மாதம், தமிழ் பாரம்­ப­ரிய மாத­மாக இவ்­வாண்டு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

கலி­ஃபோர்­னியா மாகா­ணத்­தில் தமிழ் புலம்­பெ­யர்ந்­தோர் ஏறக்­குறைய 60,000 பேர் வசிக்­கின்­ற­னர்.

அங்கு பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழ் மொழி, இலக்­கி­யத்­தின் செழு­மை­யைக் கொண்­டா­டு­வது, தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­யம், கலை­கள் பண்­பாட்­டைப் போற்றி வளர்ப்­பது, தமிழ் மக்­க­ளின் மொழி, மர­பு­கள், வர­லாறு பற்­றிய அறி­வை­யும் விழிப்­பு­ணர்­வை­யும் வளர்த்­தல், தமி­ழர்­கள் பல்­வேறு துறை­களில் ஆற்றிய சாத­னை­களை எடுத்­து­ரைத்­தல், தமி­ழர்­க­ளின் வளர்ச்­சி­யை­யும் சிறப்­பை­யும் முன்­னெ­டுப்­பது, சாத­னை­களை அங்­கீ­க­ரித்து, வேர்­களைக் கண்­ட­றி­வது, தமி­ழர்­வர­லாற்­றைக் கொண்­டா­டு­வது போன்ற பரந்த இலக்­கு­க­ளு­டன் ஜன­வரி மாதத்தை தமிழ்ப் பாரம்­பரிய மாதமாக இந்­தச் சமூகங்­கள் கொண்­டாடி வரு­கின்­றன.

சாதி, மத பேதங்களின்றி உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் தமிழர் சிறப்பும் பண்பாடும் உலகெங்கும் ஓங்க வழிவகுத்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!