வரலாற்றுப் புதையல் தேடலில் $1,000 வரை பரிசு

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூ­ரின் மர­பை­யும் அடை­யா­ளத்­தை­யும் பற்றி சிங்­கப்­பூ­ரர்­கள் மேலும் தெரிந்துகொண்டு, போற்ற வேண்டும் என்ற நோக்­கு­டன் சிங்கப்பூர் தேசிய நூலக வாரி­யம் 'க்யூ­ரோ­ஸிட்டி' (curiocity) என்ற முயற்­சியை மேற்கொண்டுள்ளது.

இதில் புத்­தாக்க முறை­யில் அமைந்­துள்ள கலைப் படைப்­பு­கள், புதையல் தேடல் விளை­யாட்­டு­கள், சிந்­த­னை­யைத் தூண்­டும் பேச்­சுக்­கள் ஆகிய அங்­கங்­களில் பொது­மக்­கள் கலந்து­கொண்டு பய­ன­டை­ய­லாம்.

கம்­போங் கிளாம், ஈசூன், பொங்­கோல் ஆகிய மூன்று வட்­டா­ரங்­களில் இடம்­பெ­றும் 'க்யூ­ரோ­ஸிட்டி' புதை­யல் தேடல்­கள், சிங்கப்­பூ­ரின் வர­லாற்­றுச் சிறப்­பு­க­ளைப் பறை­சாற்­றும் வகை­யில் அமைந்­துள்­ளன.

இந்த முயற்­சி­யில் பங்­கேற்று 1,000 வெள்ளி வரை­யி­லான பற்றுச் சீட்­டு­களை வெல்ல, பொதுமக்கள் புத்­த­கங்­களை இர­வல் பெற்று, தேசிய நூலக வாரி­யத்­தின் செய­லி­யைப் பயன்­ப­டுத்தி உத­வித் தட­யங்­கள் பெற­லாம். இந்நிகழ்வு ஜன­வரி 24ஆம் தேதி முதல் ஏப்­ரல் 10ஆம் தேதி வரை இடம்­பெ­றும்.

மேலும், தேசிய நூலக கட்­ட­டம் உட்­பட நான்கு இடங்­களில், 'ஆன்­கோர் இன் தி சிட்டி' முதலிய கண்­காட்­சி­களையும் ஜன­வரி 3ஆம் தேதி­யி­லி­ருந்து பிப்­ர­வரி 3ஆம் தேதி­வரை மக்­கள் கண்டு களிக்­க­லாம்.

'க்யூ­ரோ­ஸிட்டி' கண்­காட்­சி­யோடு, பல்­வேறு நேரடி, இணைய நட­வ­டிக்­கை­களை இவ்­வாண்டு தேசிய நூலக வாரி­யம் ஏற்பாடு செய்துள்ளது.

தனது யூடியூப் தளத்தை பயன்­ப­டுத்தி, மரபு, உணவு வர­லாறு, முத­லி­ய­வற்றை சார்ந்த ஆவ­ணப்­ப­டங்­க­ளை­யும் தேசிய நூலக வாரி­யம் ஏப்­ரல் மாதத்­தில் பதி­வி­டும். மேல் விவ­ரங்­கள் அறிய, https://curiocity.nlb.gov.sg/ என்ற இணை­யத்­தளத்தை வாச­கர்­கள் நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!