கவிமாலைச் சந்திப்பில் ஈழக்கவிஞர் கருணாகரன்

கவிமாலைச் சந்திப்பில் ஈழக்கவிஞர் கருணாகரன்

1 mins read

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை நடத்தும் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு ஸூம் தளத்தில் நடைபெறவிருக்கிறது.

ஈழக்கவிஞர் கருணாகரன், 'சமகால இலங்கை கவிஞர்க ளின் போக்கு' என்ற தலைப்பில் தனது அனுபவங்களையும், கவிதைகளின் தன்மையைப் பற்றியும் சிறப்புரையாற்ற வுள்ளார். மேலும் இவ்வாண்டின் தங்கமுனை விருதாளர்களின் சந்திப்பும் இடம்பெறவிருக்கிறது.

பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தலுடன், "பயணங்கள் முடிவதில்லை" எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் விமர்சனமும் இடம்பெற விருக்கிறது.

கவிஞர் கருணாகரனு டன் கலந்துரையாடல் அங்கமும் உண்டு. இணையம் வழி நடைபெற விருக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். Zoom App ID: 238 635 9660 ­