தியாக ரமேஷின் கவிதைநூல் வெளியீடு

தியாக ரமேஷின் கவிதைநூல் வெளியீடு

1 mins read
f2d069c6-f0c3-43c6-ac08-e21fdcddd8a7
வாழப்பாடியில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா.படம், செய்தி: தியாக ரமேஷ் -

சேலம் மாவட்­டம் வாழப்­பாடி அரங்­கத்­தில் சென்ற வாரம் தியாக ரமேஷின் 'தனி­மைத்­த­வம்' கவி­தை­நூல் வெளி­யீடு கண்­டது.

வாழப்­பாடி இலக்­கி­யப் பேரவை, உல­கத் தமிழ்க் கழ­கம் இணைந்து விழா உல­கத் தமிழ்க் கழ­கத்­தின் தமிழ் எண் மாதாந்­திர நாட்­காட்டி வெளி­யீட்­டை­யும் கவிதை நூல் வெளி­யீட்­டை­யும் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. வாழப்­பாடி அரிமா சங்க பட்­டை­யத்­த­லை­வர் சந்­தி­ர­சே­க­ரன் தலைமை வகித்­தார்.

கவிதை நூலை­யும் உல­கத் தமிழ்க் கழக நாள்­காட்­டி­யை­யும் வெளி­யிட்­டுப் பேசிய புதுச்­சேரி தூர்­தர்­ஷன் தொலைக்­காட்சி நிலைய நிகழ்ச்­சித் தலை­வர் ஆண்­டாள் பிரி­ய­தர்­ஷினி. புத்­தக வாசிப்பு குறை­ய­வில்லை, நவீன கரு­வி­கள் வாயி­லாக வாசிப்பு அதி­க­ரித்­துள்­ளது என்­றார். பலரும் கவிதை நூல் குறித்து உரை­யாற்­றி­னர். தியாக ரமேஷ் ஏற்புரை வழங்கினார்.