மூத்தோர் உணவுத் திட்டம்

மூத்தோர் உணவுத் திட்டம்

1 mins read

சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்கள் சங்­கத்­தோடு இணைந்து, 'டூ குட் வித் ஃபூட்' எனும் 'உண­வோடு நல்­ல­வற்­றைச் செய்' திட்­டத்தை ஸ்ரீ நாரா­யண மிஷன் அறி­வித்­துள்­ளது. ஸ்ரீ நாரா­யண மிஷ­னின் தாதிமை இல்­லத்­தில் தங்கியுள்ளோரின் நலன் பேணி, அவர்­க­ளுக்­குத் தர­மான உணவு வழங்­கும் நோக்­கத்­து­டன் இத்­திட்டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூத்­தோருக்கு உத­வ­வும் அவர்­களை மகிழ்­விக்­க­வும் சமூகத்­துக்கு வாய்ப்­ப­ளிக்­கிறது, 'உண­வோடு நல்­ல­வற்­றைச் செய்' திட்­டம்.

"தாதிமை இல்­லத்­தில் தரப்­படும் உணவை விரும்­பிச் சாப்­பி­டு­கிறேன். குறிப்­பாக, தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் கிடைக்­கும் நல்ல உண­வுக்­காக நாங்­கள் நன்­றிக்­க­டன்­பட்­டி­ருக்­கி­றோம். மேலும், இங்கு வசிக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து உண்­ணும் வேளை­களில் நாங்­கள் உற்­சா­கம் அடை­கி­றோம்," என்­றார் ஸ்ரீ நாரா­யண மிஷ­னில் வசிக்­கும் திரு­வாட்டி வனிதா.

சிங்­கப்­பூர் இந்­திய உணவகங்கள் சங்­கத்­தி­லி­ருந்து பத்­துக்­கும் மேற்­பட்ட இந்­திய உண­வ­கங்­கள் இத்­திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளன.

"மனதை நெகிழ வைக்­கும் இம்­மு­யற்­சி­யில் ஸ்ரீ நாரா­யண மிஷ­னு­டன் இணை­வ­தில் சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்கள் சங்­கம் பெரும் ­மகிழ்ச்­சி கொள்­கிறது. இத்­திட்­டம், நமது மூத்­தோ­ருக்கு அன்­பும் நம்­பிக்­கை­யும் அளிக்­கிறது," என்­றார் சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்கள் சங்­கத்­தின் செய­லா­ளர், திரு ச. மகேந்­தி­ரன். இத்­திட்­டத்­தில் இணைய விரும்­பு­வோர், குறிப்­பிட்ட உணவு வேளைக்கோ, அல்­லது முழு நாளுக்கோ உணவு வழங்க உத­வ­லாம்.