இன்றைய இளையருக்கு மேலும் அவசியம் அறிவின் பெருக்கமா? உறவின் நெருக்கமா? என்ற தலைப்பில் இம்மாதம் 23ஆம் தேதி நடந்த பட்டிமன்றம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஃபேஸ்புக் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது. வழக்கம்போல் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பொங்கலுக்கு சிறப்புச் சேர்த்தனர். பட்டிமன்ற நாயகராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர், திரு த. இராமலிங்கம் செயல்பட்டார்.
'அறிவின் பெருக்கமே' என்ற தலைப்பில் திருமதி வெண்ணிலா அசோகன், செல்வி இனியா செந்தில்குமார், செல்வன் ரோகித்குமார் சொக்கலிங்கம் ஆகியோரும் வாதிட 'உறவின் நெருக்கமே' என்ற தலைப்பில் திருமதி ராஜலட்சுமி ரவிக்குமார், செல்வி தீபிகா பாலமுருகன், செல்வி ஷரணிகௌரிதரன் ஆகியோரும் வாதிட்டனர்.
அனைவரின் அணுகுமுறையும் தனித்தன்மையுடன் திகழ்ந்தது பட்டிமன்றத்தின் வெற்றி என்று பலர் கருத்துரைத்தனர்.
தீர்ப்புரை வழங்கிய திரு இராமலிங்கம், அறிவுக்கும் உறவுக்குமான உறவைப் பற்றி சிறப்பாக விவரித்துத் தமது கருத்துகளை எடுத்துச் சொன்னார்.

