மேரிமவுண்ட் குடியிருப்பாளர்களின் பொங்கல்

மேரிமவுண்ட் குடியிருப்பாளர்களின் பொங்கல்

1 mins read
59adc4d0-c6f3-455d-8b36-ca4971b5db6f
மேரிமவுண்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த 'பொங்கலோ பொங்கல்' நிகழ்ச்சி. படம்: மேரிமவுண்ட் சமூக மன்றம் -

மேரி­ம­வுண்ட் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு ஏற்­பாட்­டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, 23ஆம் தேதி நடந்த, 'பொங்­கலோ பொங்­கல்' நிகழ்­வில் நேர­டி­யா­க­வும் இணை­யம் மூல­மும் சுமார் 100 வட்­டா­ர­வா­சி­கள் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர்.

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கா­னப் பேச்­சுப் போட்டி, முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ண­னின் சிறப்­புரை, கோமிக்ஸ் தி காஸல் நிறு­வ­னத்­தின் நகைச்­சுவை அங்­கம் என அனை­வ­ரும் பங்­கேற்­கும் வகை­யில் பல அங்­கங்­கள் இடம்­பெற்­றன.

பேச்­சுப் போட்­டி­யில் வென்ற மாணவர்­க­ளுக்கு, விரு­தும் ­கோப்­பை­களும் பற்­றுச்­சீட்­டு­களும் வழங்­கப்­பட்­டன.

பொங்­க­லின் வர­லாற்­றுச் சிறப்­பைப் பற்­றி­யும், இந்­தி­யர்­க­ளின் மர­பைப் பற்­றி­யும் மேலும் தெரிந்­து­கொள்­வ­தற்கு இவ்­விழா ஒரு நல்ல தள­மாக அமைந்­தது என்று மேரி­மவுண்ட் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­த் தலை­வர் முனை­வர் சின்னு பழ­னி­வேலு குறிப்­பிட்­டார். கடந்த ஈராண்டுகளாக இணையம் வழி மட்டுமே நடத்தப்பட்ட பொங்கல் நிகழ்வுகளிலிருந்து இது மாறுபட்டது.

செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி