அன்பர் தினத்துக்கு திண்டாட்டம் வேண்டாம்

அன்பர் தினத்துக்கு திண்டாட்டம் வேண்டாம்

3 mins read
839f4f77-bcc5-467f-926c-143783d628a1
படம்: அன்ஸ்பிலேஷ் -

ஆ. விஷ்ணு வர்­தினி

அன்­பர் தினத்­துக்கு இன்­னும் சில நாள்­களே உள்­ளன. இந்­நி­லை­யில், உங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்­காக என்ன செய்­வது என்ற திண்­டாட்­டம் வேண்­டாம். எல்­லோ­ருக்­கும் நன்கு பரிச்­ச­ய­மான சிங்­கப்­பூரில், குடும்­ப­மா­கவோ தம்­ப­தி­யாகவோ எங்­குச் செல்­வது என்ற தயக்­க­மும் வேண்­டாம். உங்­கள் பொழுதை அர்த்­த­முள்ள வகை­யில் அன்பு நிறைந்த தரு­ணங்­க­ளா­கக் கொண்­டா­ட சில வழி­கள் உண்டு.

சிங்­கப்­பூ­ரைச் சுற்­றிப் பார்க்­க­லாம்

சிங்­கப்­பூ­ரில் வசித்­தா­லும் நம்­மு­டைய அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் அன்­பர் தினத்­துக்­காக நாம் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளாக மாறி­வி­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரின் கிழக்­குப் பகு­தி­களை இணைக்­கும் புதிய 'ரவுண்ட் ஐலண்ட்' பாதை உள்­ளது. அதில் ஒன்­றாக மிதி­வண்டி ஓட்­டிச் சென்­றால், இயற்கை அழ­கில் திளைக்­கும் வாய்ப்பு கிடைக்­கும்.

சுமார் 75 கிலோ­மீட்­டர் நீள­முடைய இப்­பா­தையே, சிங்­கப்­பூ­ரின் ஆக நீள­மான பொழு­து­போக்கு இணைப்­புப் பாதை ஆகும். பூங்­காக்­க­ளை­யும் இயற்கை அம்­ச­முடைய பல இடங்­க­ளை­யும் இப்­பாதை இணைத்­துள்­ள­தால், இதை வாய்ப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு உங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வ­ரு­டன் உல்­லா­ச­மாக நடந்­தும் செல்­ல­லாம்.

பர­ப­ரப்­பான நக­ரச் சூழலை விரும்­பாத தம்­ப­தி­யாக நீங்­களும் உங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வ­ரும் இருந்­தால், லிம் சூ காங் பகு­தி­யில் அமைந்­துள்ள கால்­நடை பண்­ணை­க­ளை­யும் மீன் பண்­ணை­களை­யும் நாட­லாம். அமை­தி­யான இயற்­கைச் சூழ­லில் உங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் அழ­கான தரு­ணங்­கள் பற்­றி­யும் பகிர்ந்­து­கொள்ள வாய்ப்பு கிடைக்­கும்.

செல்­லப்­பி­ரா­ணி­களைக்

கொஞ்­ச­லாம்

செல்­லப்­பி­ரா­ணி­க­ளு­டன் பொழு­தைக் கழிப்­ப­தற்­கெ­னப் பல செல்­லப்­பி­ராணி சிற்­றுண்டி விடு­தி­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ளன. நாய்­கள், பூனை­கள், முயல்­கள் என்று பல­வகை­யான மனங்­க­வர் பிரா­ணி­களை வளர்க்­கும் கஃபே விடு­தி­கள் மக்­களை ஈர்த்து வரு­கின்­றன.

இவ்­வி­டு­தி­களில் உண­வ­ருந்­து­வோர், அங்கே வளர்க்­கப்­படும் பிராணி­க­ளு­டன் நேரத்­தைச் செல­வழிக்­க­லாம்.

நாய்க்­குட்­டி­க­ளு­டன் சேர்ந்து யோகா முத­லிய உடற்­ப­யிற்சி செய்­யும் மையங்­களும் தற்­போது சிங்­கப்­பூ­ரில் திறக்­கப்­பட்­டுள்­ளன. அன்­புக்­கு­ரி­ய­வர் துணை­யு­டன் செல்­லப்­பி­ரா­ணி­க­ளைக் கொஞ்­சும்­போது உங்­க­ளுக்கு நேரம் போவதே தெரி­யாது.

சேர்ந்து சமைத்­துப் பார்க்­க­லாம்

சிலர் அன்­பர் தினத்­துக்­காக தட­பு­டல் விருந்தை ஓர் உண­வ­கத்­தில் ஏற்­பாடு செய்­வர். ஆனால், வீட்­டி­லேயே சேர்ந்து சுவை­யா­கச் சமைப்­ப­தும் பேக் செய்­வ­தும்­கூட அதே பிணைப்பை உங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வ­ருக்­கும் உங்­க­ளுக்­கும் தரும்.

சமைத்­ததை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பரி­மா­றிக்­கொண்டு சேர்ந்து சாப்­பி­டு­வ­தும் இன்­ப­ம­ளிக்­கும். சமைக்­கத் தெரி­யா­விட்­டால் என்ன? யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்­துச் சேர்ந்து சமைக்­க­லாமே!

கலைக்­கூ­டங்­க­ள் செல்­ல­லாம்

உங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களு­டன் சேர்ந்து 'ஆர்ட் ஜாமிங்' போன்ற ஓவிய நிகழ்­வு­களில் கலந்து­கொள்­ள­லாம். தற்­போது சில சிற்­றுண்டி விடு­தி­க­ளி­லும் தனி­யார் உண­வங்­கா­டி­க­ளி­லும் குழுக்­க­ளாக இந்த ஆர்ட் ஜாமிங் நிகழ்­வு­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

உங்­க­ளுக்கு ஓவி­யம் வரைய வர­வில்லை என்­றா­லும், சேர்ந்து ஈடு­படும் இந்த நட­வ­டிக்­கை­யால் மறக்க முடி­யாத ஓர் இனிய அனு­பவம் ஏற்­படும் என்­பது உறுதி.

புதி­தா­கத் திறக்­கப்­பட்­டுள்ள கலைக்­கூ­டங்­க­ளை­யும் அரும்­பொரு­ள­கங்­க­ளை­யும் அன்­புக்­கு­உரி­ய­வர்­க­ளு­டன் நீங்­கள் சென்று காண­லாம். 'சிங்­கப்­பூர் மியூ­சி­க்கல் பாக்ஸ் அரும்­பொ­ரு­ள­கம்', 'விண்­டேஜ் கேமரா அரும்­பொ­ரு­ள­கம்' ஆகி­யவை அதி­கம் அறி­யப்­ப­டாத இடங்­க­ளா­கும். அங்கு உங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அழைத்­துச் சென்று அவர்­க­ளு­டன் ஒரு 'செல்ஃபி' எடுத்­துக்­கொள்­ள­லாமே!

அன்­பர் தினத்­துக்கு உங்­கள் திட்­டம் என்ன என்­பதை எங்­களு­டன் பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். தமிழ் முர­சின் சமூக ஊட­கப் பக்­கங்­களில் உங்­க­ளின் படங்­கள் அல்­லது காணொ­ளி­க­ளைப் பதி­வேற்­றம் செய்­ய­லாம். அல்­லது tamilmurasu@sph.com.sg என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரிக்­கும் அனுப்பி வைக்­க­லாம்.