உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால்...

உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால்...

2 mins read

உடற்­ப­யிற்சி செய்­வதை நிறுத்தப் போகிறீர்களா? இந்த முடி­வால் உங்­க­ளின் மூளைக்­கும் உட­லுக்­கும் எத்­த­கைய பாதிப்பு ஏற்­படும் என்­பதை அதற்கு முன்­னர் நீங்­கள் அறிந்­திட வேண்­டும்.

 மன அழுத்­தம் ஏற்­படும்

அபா­யம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்

உடற்­ப­யிற்சி செய்­த­போது மூளைக்­குச் சென்ற ரத்த அளவு, உடற்­ப­யிற்­சியை நிறுத்­தும்­போது குறைந்­தி­ருக்­கும். இத­னால் மூன்றே நாள்­களில் மன அழுத்­தத்­திற்­கான அறி­கு­றி­கள் தோன்­ற­லாம் என்று 'யுனி­வர்­சிட்டி ஆஃப் அடி­லெய்ட்' நடத்­திய ஆய்வு ஒன்று கூறு­கிறது.

 ரத்த அழுத்­தம்

அதி­க­ரிக்­கக்­கூ­டும்

உடற்­ப­யிற்­சியை நிறுத்­திய இரண்டு வாரங்­களில் ரத்த நாளங்­களில் விறைப்பு ஏற்­பட்டு ரத்த அழுத்­தம் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று தென்­னாப்­பி­ரிக்க ஆய்­வா­ளர்­கள் கண்­டறிந்­துள்­ள­னர்.

 ரத்த இனிப்­ப­ள­வின்

கட்­டுப்­பாட்டை இழக்­கக்­கூ­டும்

ரத்த இனிப்­ப­ள­வைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்­தால் உடல் பரு­மன், களைப்பு, நாள்­பட்ட நோய்­கள் ஆகி­ய­வற்­றைத் தவிர்க்­க­லாம். உடற்­ப­யிற்­சியை நிறுத்­தி­னால் இந்த அறி­கு­றி­கள் தலை­காட்­டத் தொடங்­கும்.

 உடல் எடை அதி­க­ரிக்­கக்­கூ­டும்

உடற்­ப­யிற்­சியை நிறுத்­தும்­போது அது­வரை நீங்­கள் உட்­கொண்ட உண­வின் அள­வைத் தொடர்ந்­தால் உங்­க­ளின் உடல் எடை அதி­க­ரிக்­க­லாம் என்று நியூ யார்க் உடற்­ப­யிற்சி நிபு­ணர் ஜேம்ஸ் ஷபீரோ கூறு­கி­றார்.

 தசை­கள் சுருங்­கக்­கூ­டும்

உடற்­ப­யிற்சி இன்றி தசை எடை­யும் எலும்பு ஆரோக்­கி­ய­மும் குறை­யும். எளி­தில் திரும்ப இவற்­றைப் பெற­வும் முடி­யாது. இந்­நி­லை­யில், கடும் காயங்­கள் ஏற்­படும் சாத்­தி­ய­மும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்க எலும்­பி­யல் துறை நிபு­ணர் மிஹோ தனக்கா கூறு­கி­றார்.

 எலும்­பு­கள் வலு­விழக்கக்­கூ­டும்

நடப்­பது, மெது­வோட்­டம் ஓடு­வது, எடை தூக்­கு­வது போன்­ற­வற்­றால் எலும்பை வலு­வாக்­கு­கி­றோம். அத­னால் உடற்­ப­யிற்­சியை நிறுத்­தும்­போது எலும்­புப்­புரை நோய் ஏற்­படும் அபா­யம் அதி­க­ரிக்­க­லாம் என்று 'மேயோ கிளி­னிக்' கூறு­கிறது.