வரும் திங்கட்கிழமையன்று அன்பர் தினம். இந்த நாள் காதலர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்
பினருக்கும் உரியது.
கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் என அன்புக்
குரியவர்கள் அனைவருடனும்
அன்பர் தினத்தைக் கொண்டாடலாம். இருப்பினும், அன்பர் தினத்துக்கு காதலர் தினம் என்ற
பெயரும் உண்டு.
காதலர்கள், கணவன்-மனைவி ஆகியோர் அதிகம் கொண்டாடும் இந்த அன்பர் தினத்துக்காக சில உணவகங்கள் சிறப்பு ஏற்பாடு
களைச் செய்துள்ளன.
மவுண்ட் ஃபேபர் பொழுதுபோக்கு குழுமம்
மவுண்ட் ஃபேபர் பீக்கின் மூன்று உணவகங்களிலும் அன்பர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கம்பி வண்டியில் அமர்ந்து உணவருந்த விரும்பும் ஜோடிகள்
இந்தத் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். தம்பதியர் செலுத்த
வேண்டிய கட்டணம் $328++.
கம்பி வண்டியில் அமர்ந்துகொண்டு வெளியில் உள்ள இயற்கை அழகை ரசித்தபடி
ஆஸ்திரேலிய கிரீன் லிப்
அபலோன், அமெரிக்க பாணியில் தயாரிக்கப்படும் லாப்ஸ்டர் தக்காளி கிரீம் சூப் உட்பட பல்வகை உணவு, பானங்களைச் சுவைக்கலாம்.
மவுண்ட் ஃபேபர் பீக்கின்
அர்போரா ஹில்டாப் கார்டன் அண்ட் பிஸ்ட்ரோ உணவகத்தில் பரிமாறப்படும் அன்பர் தின பகல் நேர உணவை ருசிக்க விரும்பும் தம்பதியர் $248++ செலுத்தி
கியூபிட்ஸ் ஏரோ காக்டேல், உட்பட பல சுவைமிக்க உணவுகளை உண்டு மகிழலாம்.
டஸ்க் உணவகம் மற்றும் மதுபானக் கூடத்தில் $288++ செலுத்தி தம்பதியர் வறுக்கப்பட்ட லாப்ஸ்டர் போன்ற உணவுவகைகளைச் சுவைக்கலாம்.
இந்த உணவகங்களில் உணவருந்தும் தம்பதியருக்குக் கம்பி வண்டி சலுகை கட்டண அட்டையில் $20 தள்ளுபடி வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கம்பி வண்டியில் பயணம் செய்யலாம்.
இந்த அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் சிங்கப்பூரின் ஆக உயரமான திறந்த வெளிப் பயணமான ஸ்கைஹெலிக்ஸ் செந்தோசாவுக்கும் செல்லலாம்.
அதற்கான கட்டணத்தில் அவர்களுக்கு 20 விழுக்காடு
தள்ளுபடி வழங்கப்படும்.
இடம்: மவுண்ட் ஃபேபர் பீக்,
109 மவுண்ட் ஃபேபர் சாலை
எம்ஆர்டி நிலையம்: ஹார்பர்ஃபிரண்ட்
சிறப்பு சலுகை நாள்கள்: இன்று முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை மாலை 5.30 மணியிலிருந்து.
தொலைபேசி எண்: 9627 9970
இணையப்பக்கம்: https://www.mountfaberleisure.com/take-love-to-the-next-level/
லிட்டில் இந்தியாவிலும் ஹாலந்து வில்லேஜ்ஜிலும் உள்ள சிம்மிசாங்கா உணவகம்
லிட்டில் இந்தியாவிலும் ஹாலந்து வில்லேஜ்ஜிலும் உள்ள மெக்சிகோ உணவகமான சிம்மிசாங்காவிலும் அன்பர் தினத்தை முன்னிட்டு தம்பதியருக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தம்பதியருக்கான கட்டணம் $99++. chimichanga.sg/shop எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று அதற்குத் தேவையான பற்றுச்
சீட்டுகளை வாங்க வேண்டும்.
பற்றுச்சீட்டுகளை இன்றும் நாளையும் வாங்கலாம். பற்றுச்சீட்டை இம்மாதம் 14ஆம் தேதி அன்பர் தினத்தன்று மட்டுமே பயன்படுத்த முடியும். முன்பதிவை உறுதி செய்ய உணவகம் தொடர்பு கொள்ளும். பற்றுச்சீட்டைப் பயன்
படுத்தி அன்பர் தின சிறப்பு விருந்தைத் தம்பதியர் சுவைக்கலாம்.
ரிப்-ஐ ஸ்டேக், அடோபோ
ஆட்டிறைச்சி கட்லட்ஸ், சிம்மிசாங்கா ஆகியவற்றில் ஏதேனும் இரண்டைத் தேர்ந்தெடுக்கலாம். வயின், ஷேம்பேன், காக்டேல் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
இடம்: சிம்மிசாங்கா லிட்டில்
இந்தியா, 36 டன்லப் ஸ்திரீட்
அல்லது சிம்மிசாங்கா ஹாலந்து வில்லேஜ் 01-02/03 ஹாலந்து பியாஸா, 3 லோராங் லிப்புட்
இணையப்பக்கம்:
chimichanga.sg/shop
தொலைபேசி: 62933314