சிங்கப்பூர் படைப்புகளை வாசித்தறிய ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள்

சிங்கப்பூர் படைப்புகளை வாசித்தறிய ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள்

2 mins read

கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக 'சிங்­கப்­பூர் இலக்­கி­யங்­களை வாங்­குங்­கள்' (BuySingLit) என்ற இலக்­கிய இயக்­கம், உள்­ளூர் இலக்­கிய நூல்­களை வாங்க வைப்­ப­தன் மூலம் சிங்­கப்­பூர் இலக்­கி­யத்தை ஆத­ரித்து வளர்க்­கும் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­தது.

இலக்­கி­யத் துறை­யி­ன­ரால் செயல்­ப­டுத்­தப்­படும் இந்த இயக்­கத்­தின் அடுத்த கட்­ட­மாக, இலக்­கி­யத்தை அறி­யச் செய்­யும் முயற்சி­கள் முன்­னெ­டுக்­கப்­பட உள்­ளன.

'சிங்­கப்­பூர் இலக்­கி­யம்: நம் உலகை வாசிப்­போம்' என்ற புதிய பெய­ரு­டன் இந்த ஆண்டு நிகழ்ச்சி­கள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றன.

கடந்த 2017ல் தொடங்­கப்­பட்ட இந்த இயக்­கம், ஒவ்­வோர் ஆண்­டும் மார்ச் மாதம் நடை­பெ­றும் இரண்டு வார இறுதி இலக்­கிய விழா­வுக்­குப் பதி­லாக, சிங்­கப்­பூர் இலக்­கி­யத்தை வாச­கர்­க­ளுக்கு கொண்டுசெல்ல ஆண்டு முழு­வதும் முயற்­சி­களை மேற்­கொள்ள உள்­ளது.

அதன் ஓர் அங்­க­மாக இம்­மாதம் 'சிங் லிட்' நிலை­யம் 'புளோக்' கொண்­டாட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. இதில் மெய்­நி­கர் நிகழ்ச்­சி­கள், குழு விவா­தங்­கள் போன்­றவை இடம்­பெ­றும்.

"சிங்­கப்­பூர் இலக்­கி­யத்தை வாசிக்க ஊக்­கு­விக்­கும் இந்த இயக்­கம் எங்­க­ளைப் போன்ற எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­க­ளுக்­கும் ஒருங்­கி­ணைத்த குரல்­க­ளுக்­கும் பேரா­த­ர­வாக விளங்­கு­கிறது," என்­றார் எழுத்­தா­ள­ரும் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரு­மான முனை­வர் அனி­தா­தேவி பிள்ளை.

"சிங்­கப்­பூர் இலக்­கி­யம் என்­பது நமது இலக்­கி­யம், நமது கதை­கள். கண்­ணா­டி­யில் தெரி­யும் பிம்­பம் போல் நம்­மு­டைய முகத்தை நாமே காண்­பதுபோல் நம் கதை­களை நாம் பேசு­கி­றோம்.

"இங்­கு­தான் நாம் உண்­மை­யாக நமது குரலை நேர்­மை­யோடு பதிவு செய்­கி­றோம். சிங்­கப்­பூர் வாழ்­வியல் சார்ந்­தவை அனைத்­தை­யும் உள்­ள­டக்­கி­யதே சிங்கை இலக்­கி­ய­மா­கும்," என்­றார் தேசி­யக் கல்­விக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மூத்த விரி­வு­ரை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் முனை­வர் அனி­தா­தேவி.

இந்த ஆண்டு இயக்­கத்­தின் ஓர் அங்­க­மாக மார்ச் மாதம் சிங்­கப்­பூர் புத்­தக வெளி­யீட்­டா­ளர்­கள் சங்­கத்­தின் புத்­த­கச் சந்தை இடம்­பெ­று­கிறது.

ஏப்­ரல் 16ஆம் தேதி தமிழ் நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

கடந்த 2017ல் தொடங்­கப்­பட்ட இந்த இயக்­கத்தை சிங்­கப்­பூர் புத்­தக மன்­றம், சிங்­கப்­பூர் புத்­தக வெளி­யீட்­டா­ளர் சங்­கம் ஆகி­யவை வழி­ந­டத்­து­கின்­றன.

நிகழ்ச்சி குறித்த மேல் விவ­ரங்­களை https://singlit.world/ என்ற இணை­யப்­பக்­கத்­தில் காண­லாம். ஃபேஸ்­புக்: https://www.facebook.com/singlit.world

புத்­த­கம் வெளி­யி­டும் ஆர்­வம் உள்­ள­வர்­கள் https://t.me/singlitislit இணை­யப்­பக்க முக­வரி­யில் (டெலிகிராம் குழு) எழுத்­தா­ளர்­கள், வெளி­யீட்­டா­ளர்­கள், மொழிபெயர்ப்­பா­ளர்­கள், சித்­தி­ரக் கலை­ஞர்­கள், ஆசி­ரி­யர்­கள், வாச­கர்­க­ளு­டன் தொடர்புகொள்­ள­லாம்.

கூடு­தல் செய்தி: சக்தி மேகனா