மூன்று பிரிவுகளில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

மூன்று பிரிவுகளில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

1 mins read

ஈராண்­டுக்கு ஒரு­முறை சிங்­கப்­பூர் புத்­தக மன்­றம் வழங்­கும் சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரி­சுக்கு நூல்­களை அனுப்பி வையுங்­கள்.

சிங்­கப்­பூ­ரின் நான்கு அதிகாரத்­துவ மொழி­க­ளான சீனம், ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஆகியவற்றில் புதி­னம், அபு­தி­னம், கவிதை ஆகிய மூன்று பிரி­வு­களில் பரி­சு­கள் வழங்­கப்படும்.

18 வயது நிரம்­பிய சிங்­கப்­பூர் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இப்­போட்­டிக்கு தாங்­கள் எழு­திய நூல்­களை அனுப்­ப­லாம். 01-01-2020க்கும் 31-12-2021க்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் படைப்பு வெளி­யீடு கண்­டி­ருக்க வேண்­டும்.

மறு­ப­திப்­பு­கள், முந்­தைய ஆண்டு களி­லி­ருந்து புதுப்­பிக்­கப்­பட்ட பதிப்­பு­கள் அல்­லது மறு வெளியீடு­கள் ஆகி­யவை போட்­டிக்­குத் தகுதி பெறாது. போட்­டி­யின் 12 பரி­சுப் பிரி­வு­கள் ஒவ்­வொன்­றி­லும் வெற்றி­யா­ள­ருக்கு $3,000 ரொக்­க­மும் பரி­சுக் கிண்­ண­மும் வழங்­கப்­படும்.

கடந்த 1992ல் தொடங்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய இலக்­கி­யப் பரி­சான சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரிசை இது­வ­ரை­யில் தொண்­ணூற்­றுக்­கும் அதி­க­மான எழுத்­தா­ளர்­கள் பெற்­றுள்­ள­னர். போட்­டிக்கு நூல்­களை அனுப்பி வைப்­ப­தற்­கான கடைசி நாள்: 18.2.2022.

விண்­ணப்­பப் ப­டி­வத்­துக்­கும் மேல்­வி­வ­ரங்­க­ளுக்­கும் https://www.bookcouncil.sg/offcanvas-awards/offcanvas-slp/offcanvas-singapore-literature-prize-2022 என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம்.