வரலாற்றில் இடம்பிடித்த இடங்களில் சுற்றுலா

வரலாற்றில் இடம்பிடித்த இடங்களில் சுற்றுலா

2 mins read
28ce694c-2b56-4058-b6a3-3e27ee63ba3a
இரண்டாம் உலகப் போரின்போது சிலேத்தாரிலுள்ள ஆகாயப் படைதான் மலாயாவையும் சிங்கப்பூரையும் தற்காத்தது. ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தபோது இந்த இடம் அவர்களது கடற்படைத் தலைமையகமாக மாறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி ஜனார்த்­த­னன்

நவீ­ன­ம­ய­மா­கும் சிங்­கப்பூர் நக­ரக் காட்­சி­யில் இரண்­டாம் உல­கப் போரின்­போது நடந்த ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்­பு­டன் தொடர்­பு­டைய இடங்­கள் இன்­றும் உள்­ளன. போர்க்காலத்­தின்­போது சிங்­கப்­பூ­ரில் இருந்­த­வர்­க­ளின் மீள்­தி­ற­னுக்­கும் அஞ்­சா­மைக்­கும் சாட்­சி­யா­கத் திக­ழும் இந்த இடங்­களில், படை­யெ­டுப்­பின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்­னிட்டு சுற்­று­லாக்­கள் நடத்­தப்பட்டு

வரு­கின்­றன.

சாங்கி தேவா­ல­யம்,

அரும்­பொ­ரு­ள­கம்

இரண்­டாம் உல­கப்­போ­ரின்­போது சிறை­யிடப்­பட்ட பிரிட்­டிஷ் படை யினர் மற்­றும் மேற்­கத்­திய கூட்­டுப்­ப­டை­யி­னர் கட்­டிய பல்­வேறு தேவா­ல­யங்­களில் இது­வும் ஒன்று. இந்­தத் தேவா­ல­யம் சாங்கி சிறைக்­குள்­ளேயே கட்­டப்­பட்­டது. இந்த தேவா­ல­யத்­திற்­குள் இருக்­கும் எட்டு கலைக்­கூ­டங்­களில் 114க்கும் அதி­க­மான பொருள்கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

தேதி: பிப்­ர­வரி 19ஆம் தேதி

நேரம்: காலை 9.30-11.45 மணி, காலை 10.45- ப­கல் 1 மணி வரை

179 பிக்­கா­டில்லி

பிரிட்­டிஷ் ஆகா­யப்­ப­டை­யின் தலை­மை­ய­க­மா­க­வும் நிரந்­த­ரக் கட்­ட­டங்­களில் ஆகப் பழையதா­க­வும் உள்­ளது. இரண்­டாம் உல­கப் போரின்­போது சிலேத்தாரிலுள்ள ஆகா­யப்­ப­டை­தான் மலா­யா­வை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் தற்­காத்­தது. ஜப்­பா­னி­யர்­கள் ஆக்­கி­ர­மித்­த­போது இந்த இடம் அவர்­க­ளது கடற்­படை தலைமையக­மாக மாறி­யது.

தேதி: பிப்­ர­வரி 12, 13, 19, 20, 26, 27ஆம் தேதி­கள்

நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, பிற்­ப­கல் 2 மணி முதல் 3.30 மணி வரை

முன்­னாள் ஃபோர்டு தொழிற்­சாலை

முன்­னாள் ஃபோர்டு தொழிற்­சாலையை இரண்­டாம் உல­கப் போரின்போது விமா­னங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்த பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­கள் எண்ணி னர். ஆயி­னும், அந்த நோக்­கம் ஈடே­றா­மல் ஜப்­பா­னி­யர்­கள் அந்­தத் தொழிற்­சா­லையை ஆக்கிரமித்­த­னர். இத்­தொ­ழிற்­சா­லை­யைச் சுற்றி பிரிட்­டிஷ் துருப்­பி­ன­ருக்­கும் ஜப்­பா­னியத் துருப்­பி­ன­ருக்­கும் இடையே சண்­டை­கள் நடந்தன. தொழிற்­சா­லை­யைக் கைப்­பற்­றிய ஜப்­பா­னி­யர்­கள், லாரி­க­ளை­யும் இதர மோட்­டார் வாக­னங்­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தற்­காக நிசான் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைத்­தனர். அங்கு தயா­ரிக்­கப்­பட்ட வாகனங்­கள் ஆசி­யா­வில் ஜப்­பான் ஆதிக்­கம் செலுத்­திய பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டன.

தேதி: பிப்­ர­வரி 15ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை.

கில்­மன் ராணுவ முகாம்

தற்­போது கலை­க­ளுக்­கான நிலை­ய­மா­கத் திக­ழும் கில்­மன் ராணுவ முகாமில் பிரிட்­டிஷ் வீரர்­கள் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் முன்­னர் தங்­கி­யி­ருந்­த­னர். படை எடுப்­பின்­போது இங்­கும் பலத்த யுத்­தம் நடந்­தது.

தேதி: பிப்­ர­வரி 12, 19, 26 மற்றும் மார்ச் 5ஆம் தேதி­கள்

நேரம்: மாலை 5 மணி

இந்­தச் சுற்­று­லாக்­க­ளுக்­குச் செல்ல ஆர்­வ­முள்­ளோர், தேசிய கலை­கள் மன்­றத்­தின் இணை­யப் பக்­கத்தை நாட­வும்.