பயன் தரும் அரிசி நீர்

பயன் தரும் அரிசி நீர்

1 mins read

 முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பின் வாசனைக்கு எறும்பு வந்து விடுகிறதா? கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி டப்பாவில் போட்டு வைத்தால் ஓர் எறும்பு கூட எட்டிப் பார்க்காது.

 எந்த அரிசியாக இருந்தாலும் நீங்கள் முதல் தடவை நன்கு தண்ணீரில் கழுவி ஊற்றிய பின்பு, இரண்டாவது தடவை ஊற்றும் தண்ணீரை மற்ற பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இரண்டாவது அரிசி களைந்த நீரில் வைட்டமின் பி6, பி12 இருப்பதால் இதனை வீணாக்காமல் புளி ஊற வைக்கவும் காய்கறிகளை வேக வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 மிளகாய் வத்தலை நீங்கள் வெறும் வாணலியில் போட்டு வறுக்கும் முன்னர் அதில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி னால் மிளகாய் நெடி மூக்கை துளைக்காது.

 சாம்பார் வைக்க துவரம் பருப்பை குக்கரில் வேகவைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும் சீக்கிரம் வீணாகாமலும் இருக்கும்.