80 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கி அசத்தும் சமந்தா

80 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கி அசத்தும் சமந்தா

2 mins read
e7be5b1a-2e11-47b8-8232-2e6eff1fa020
உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் 75 கிலோ முதல் 80 கிலோ வரை­யி­லான எடை­களைத் தூக்­கும் சமந்தா. படங்கள்: இந்திய ஊடகம் -

சமந்தா பெண்­கள் பல­ருக்­கும் தொடர்ந்து உத்­வே­கம் தந்து வரு­கி­றார். குறிப்­பாக, ஆரோக்­கி­யத்­தில் அக்­கறை செலுத்­து­வ­தி­லும் உடற்­கட்­டு­டன் இருப்­ப­தி­லும் அவர் அதி­க ஆர்­வம் காட்டி வரு­கி­றார். அவ­ரது எளி­மை­யான உணவு முறை, உடற்­ப­யிற்சி வழக்­கமே அவரை இன்­று­வரை ஃபிட்டா­க­வும் ஆரோக்­கி­ய­மா­க­வும் வைத்­தி­ருக்­கிறது. எடைப் பயிற்சி, புஷ்-அப் பயிற்­சி­கள், யோகா, சைக்­கிள், இத­யத்­திற்­கான 'கார்­டியோ' ஆகி­யவை சமந்தா செய்­யும் பயிற்­சி­க­ளா­கும்.

அண்­மைய இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில், சமந்தா தனது பயிற்­சி­யா­ளர் ஜுனைத் ஷேக்­கு­டன் ஜிம்­மில் உடற்­ப­யிற்சி செய்­யும் காணொளி யைப் பகிர்ந்­துகொண்டார்.

அது அனை­வ­ரை­யும் ஊக்­கு­விக்­கும் வித­மாக இருந்­தது.

"முழங்­கா­லைப் பயன்­ப­டுத்தி ஜம்­பிங் ஸ்கு­வாட் (kneeling jump squat) செய்­ய­வேண்­டும். இதில் எந்தக் கரு­வி­யும் பயன்­ப­டுத்­தக் கூடாது. உங்­கள் கலோ­ரி­களை எரிக்­க­வும் உடல் எடை­யைக் குறைக்­க­வும் இதுவே நல்ல தொடக்­கம். இதைச் செய்­தால் உடனே நல்ல பலன் கிடைக்­கும்," எனக் கூறி­யுள்­ளார்.

பயிற்சி வழிமுறை:

படி 1: இரு கைக­ளை­யும் இறுகப் பிடித்து கால்­க­ளை­யும் மடக்கி மண்டி­யி­ட்ட­வாறு அமர வேண்­டும்.

படி 2: பின் மூச்சை நன்கு உள்­ளி­ழுக்­க­வும். பின்­னர் மூச்சை வெளி­விட்டு ஓய்வு அடையுங்கள்.

படி 3: இறு­தி­யாக உங்­கள் ஒட்டு­மொத்த ஆற்­ற­லை­யும் பயன்­ப­டுத்தி குதித்து அம­ருங்­கள்.

படி 4: நீங்­கள் ஆரம்ப நிலைக்­குத் திரும்­பும்­போது மூச்சை உள்­ளி­ழுக்­க­வும்.

நீங்­கள் முழங்­கா­லில் ஜம்ப் ஸ்கு­வாட் செய்­யும்­போது, உங்­கள் கால், இடுப்பு, தொடை எலும்­பு­கள் மற்­றும் முது­குத் தண்­டு­வ­டத்­தில் கலோ­ரி­கள் குறை­வதை உண­ர­லாம். இந்த உடற்­ப­யிற்சி குறு­கிய காலத்­தில் அதிக அளவு கலோ­ரி­களை எரிக்க உத­வு­கிறது.

அதேநேரத்­தில் உங்­கள் வளர்­சிதை மாற்ற விகி­தத்தை 48 மணி­நே­ரம் வரை அதி­க­ரிக்­கிறது. இந்த உடற்­ப­யிற்சி உங்­கள் நடு, கீழ் முதுகு வலி­மை­யை­யும் மேம்­ப­டுத்­து­கிறது என்­கி­றார் சமந்தா.

உடற்கட்டு ஆர்­வ­ல­ரான 33 வயது சமந்தா உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் 75 கிலோ, 78 கிலோ, 80 கிலோ வரை­யி­லான எடை­களை சர்­வ­சாதா ரணமாகத் தூக்­கும் காணொளி யைத் தனது இன்ஸ்­டகி­ரா­ம் பக்கத்தில் பகிர்ந்­துள்­ளார். இந்­தக் காணொளி சமூக வலைத்­தளத்தில் பரவி வரும் நிலை­யில், சமந்­தா­வின் முயற்சி தங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக இருப்­ப­தாக பல­ரும் கருத்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

தனது உண­வுப் பழக்­கம் குறித்து ஒரு நேர்­கா­ண­லில் சமந்தா கூறு­கை­யில், காலை உண­வில் அவகாடோ, முட்­டை­கள் இருக்­கும். பின்­னர் மதிய உண­வில் மீன் அல்­லது ஆட்டு இறைச்­சியை எடுத்­துக்கொள்­கி­றேன். சில நேரங்­களில் மாலை­யில் பசி ஏற்­பட்­டால், சர்க்­கரை வள்­ளிக்­கி­ழங்கு அல்­லது முட்­டை­களை வேகவைத்து எடுத்­துக்கொள்­வேன். இரவு உணவு என்று வரும்போது, நான் சில காய்­க­றி­கள், ஆட்­டி­றைச்சி அல்­லது மீனைத் தேர்ந்­தெ­டுத்து சாப்­பி­டு­வேன். ஞாயிற்­றுக்கிழ­மை­யில் பிரி­யாணி, இறால் மற்­றும் அனைத்து வகை­யான கார­மான உண­வு­க­ளை­யும் சாப்­பி­டு­வேன் என்­றும் சமந்தா கூறி­யுள்­ளார்.